next mgr is ajith cho ramaswmy quote
அதிக ரசிகர்களைப் பெற்றிருப்பதில் எம்.ஜி.ஆர்.-க்கு அடுத்து அஜித்தான் என நடிகரும், விமர்சகரும், மூத்த பத்திரிக்கையாளருமான சோ ராமசாமி தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கையாளரும், நடிகருமாகிய சோ ராமசாமி ஒருவரை பாராட்டுவது என்பது அதிசயமான நிகழ்வுதான். விமர்சனமின்றி, குறைகளை சுட்டிக்காட்டாமல் அவர் எந்த ஒரு ஆளுமையையும் இதுவரை பாராட்டியது இல்லை என்று கூறலாம்.
எம்ஜிஆர் தான் பலராலும் இன்றும் போற்றப்படும் ரசிக்கப்படும் மிகப்பெரிய தலைவர், அவரால் மிகப்பெரிய அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை ஈர்க்க முடிந்தது. அவரை வழிபடவே செய்யத் தொடங்கிவிட்டனர் அவரது ரசிகர்கள். அப்பேர்பட்ட எம்.ஜி.ஆர். போன்று இன்று அஜித் உள்ளார். மிகப்பெரிய ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பதில் எம்.ஜி.ஆர்.க்கு அடுத்தது அஜித் தான் ஆனாலும்
“எம்.ஜி.ஆர்.க்கு ஈடு இணை இல்லை என கூறியுள்ளார் சோ.”
உண்மையிலேயே சோ ஒருவரை புகழ்கிறார் என்றால், அது வசிஷ்டர் வாயால் கிடைத்த பிரம்ம ரிஷி பட்டம் போன்றுதான்.