world ozone day சூரியனின் புறஊதாக் கதிர்வீச்சு ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளில் இருந்து பூமிப் பந்தில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது ஓசோன் படலம். அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், செப்டம்பர் 16-ம் தேதியை ஓசோன் படலப் பாதுகாப்பு நாளாக ஐ.நா. அறிவித்துள்ளது. ஓசோன் படலம் சிதைந்து வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் 1970களில் விஞ்ஞானிகள் குரல் கொடுத்தனர். ஹாலந்தைச் சேர்ந்த பால் குருட்சன், ஓசோன் படலத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதைக் கண்டறிந்தார். அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் குளோரோ புளூரோ கார்பன்கள் (Chloro fluro carbons – CFC), மிதைல் குளோரோபார்ம் போன்ற வேதிப்பொருள்கள் ஓசோன் படலத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது தெரிந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உருவான சில கருவிகளே அந்த வேதிப்பொருட்களை வெளியிட்டன. கனடா நாட்டிலுள்ள மாண்ட்ரீல் நகரில் 1987-ம் ஆண்டு…
Read MoreCategory: தமிழ் சிறகுகள் By Roopa Rajendran
சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் தகவல்
Strong solar storm heading to Earth, say scientists மணிக்கு 2.5 மில்லியன் மைல் என்ற வேகத்தில், சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மணிக்கு 2.5 மில்லியன் மைல் என்ற வேகத்தில் சூரியப் புயல் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியை நோக்கி வருகிறது என்று கொலராடோவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பெர்ஜர் கூறியுள்ளார். இதனால் தகவல் தொடர்பு மின்சார பரிமாற்றங்கள் பாதிக்ககூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சூரியனிலிருந்து அதிசக்தி வாய்ந்த வெப்பம் வெளிப்படும்போது புயலாக மாறி அண்ட வெளியில் அவ்வப்போது பரவி வருகிறது. பொதுவாக சூரியப் புயல்கள் சூரிய சுழற்சியின் உச்சத்தில் ஏற்படுவது. இவை மக்களுக்கு எந்த தீங்கும் விளைவிப்பதல்ல. ஆனால் இம்முறை, சூரியனில் பெரும் காந்த…
Read Moreலச்சகணக்கான கூகுள் பயனாளர்களின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகள் திருட்டு
4.93 Million Gmail Accounts Hacked: Check If Yours Is Safe ரஷ்யாவை சேர்ந்த ‘ஹேக்கர்’ (தகவல் திருட்டு) ஒருவர் 4.93 மில்லியன் கூகுள் கணக்குகளை ஹேக் செய்து அவற்றின் பாஸ்வேர்டு மற்றும் யூசர்நேம்களை ஆன்லைனில் போஸ்ட் செய்திருப்பது பீதியை கிளப்பியுள்ளது. உங்களுடைய ஜிமெயில், கூகுள் பிளஸ், கூகுள் டிரைவ், ஹேங் அவுட், யூடியூப் போன்ற கூகுள் கணக்குகள் பாதுகாப்பாக உள்ளதா? என்பதை அறிய https://isleaked.com/en என்ற லிங்க்-ஐ கிளிக் செய்து அதில் உங்கள் ஜிமெயில் ஐ.டியை கொடுங்கள். உங்களுக்கு ஜிமெயில் முகவரியை பதிவு செய்ய விருப்பமில்லை எனில் அதிலுள்ள கடைசி 3 எழுத்துக்களை மட்டும் விட்டுவிட்டு பதிவு செய்யலாம். நீங்கள் பதிவு செய்த பெயரிலுள்ள அனைத்து இமெயில் கணக்குகளையும் இந்த இணையதளம் பட்டியலிடும். அவற்றில் உங்கள் இமெயில் முகவரி இருந்தால் உங்கள் அக்கௌண்ட் ஹேக்…
Read Moreதிருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உறவினர் போல் நடித்து பச்சிளம் குழந்தையை கடத்திய பெண்
Newborn girl stolen from medical college hospital நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மனைவி சரோஜா. இவர் இரண்டாவது மனைவி என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சரோஜா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான அவர் பிரவசத்திற்காக கடந்த 8ம் தேதி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 9ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் பிரவச வார்டு மாடியில் உள்ள குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை பிரிவில் இருந்தனர். சரோஜாவுடன் அவரது உறவினர் என்ற பெயரில் ஜெயலட்சுமி என்பவர் தங்கியுள்ளார். சரோஜாவுக்கு பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார். இந்நிலையில்,…
Read Moreஇன்று எழுத்தாளர் கல்கியின் பிறந்தநாள்
வரலாற்றுப் புதினத்தின் தந்தை எனஅழைக்கப்பட்ட கல்கி அவர்களின் பிறந்தநாள் இன்று. தம் படைப்புகளால் சமகால சமூகநிலையைப் பிரதிபலித்ததோடு, வரலாற்றையும் திரும்பிப்பார்க்கவைத்தவர் கல்கி ஆவார். கல்கி (செப்டம்பர் 9, 1899 – டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. கல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில்…
Read Moreசெப்டம்பர் 8 : சர்வதேச எழுத்தறிவு தினம்
International literacy day to be celebrated on September 8 சர்வதேச எழுத்தறிவு தினம், இன்று கொண்டாடப்படுகிறது. 1965ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8ஆம் தேதியைச் சர்வதேச எழுத்தறிவு தினமாகக் கொண்டாட, யுனெஸ்கோ முடிவு எடுத்தது. உலகில் எழுத்தறிவு இல்லாத 77 கோடியே 50 லட்சம் பேர் இருப்பதாகவும் உலகில் 5 பேரில் ஒருவர் இப்போதும் எழுத்தறிவு இல்லாதவராக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எழுத்தறிவு மற்றும் நிலையான வளர்ச்சி என்பதே இந்த ஆண்டின் கருப் பொருளாகும். இந்த நாளையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. International literacy day to be celebrated on September 8 The National Literacy Mission Authority (NLMA) will organize International Literacy Day (ILD) celebrations in the country on September 8.…
Read Moreகர்நாடகாவில் மணல் கடத்தல் லாரி அரசு பேருது மீது மோதி 13 பேர் பலி
13 die as Tirupati-bound bus collides with sand-laden lorry ர்: போலீசார் விரட்டி சென்ற மண் கடத்தல் லாரி, அரசு பேருந்து மீது மோதியதில், பேருந்தில் பயணம் செய்த 13 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தும்கூர் நகரத்தில் இருந்து கர்நாடக அரசு பேருந்து பெங்களூர் மார்க்கமாக 50 பயணிகளுடன் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது கோலார் அருகே முல்பாகல் மற்றும் நங்கிலி இடையே கம்பலமடகு என்ற இடத்தில் ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த லாரியை போலீசார் வேகமாக விரட்டி வந்தனர். இதனால் லாரி மின்னல் வேகத்தில் சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.இதில் பேருந்தின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போன்று நொறுங்கியது. அதில் பயணம் செய்த 9 பேர்…
Read Moreதமிழக சிறைகளில் இருந்து ஒரே நாளில் 3000 விசாரணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்
A total of 3,000 undertrials were released at the annual prison adalats held in Tamilnadu prisons. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப, தமிழக சிறைகளில் நீண்ட காலம் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகள் சுமார் 3 ஆயிரம் பேர் ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனர் என சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய சிறைகளில் உள்ள 4 லட்சம் சிறைக் கைதிகளில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் நீண்ட கால விசாரணையின் காரணமாக பல ஆண்டுகள் தண்டணை வழங்கப்படாமலேயே விசாரணைக் கைதிகளாக சிறையில் இருந்து வருகின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு குற்றம் சாட்டப்பட்டவர், அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு கிடைக்கும் தண்டனையில் பாதி காலத்தை, அவரது தண்டனை நிரூபிக்கப்படாமல் விசாரணைக் கைதியாகவே கழித்துவிட்டால், அவரை விடுதலை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி, தண்டனைக் காலத்தில் பாதி…
Read Moreசெப்டம்பர் 5: கப்பலோட்டிய தமிழன், வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்தநாள்
September 5th V. O. Chidambaram pillai Birthday ‘கப்பலோட்டிய தமிழன்’வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம் இன்று. விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில் பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும். எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது. பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின் விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. 1905-ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திர போராட்டத்தில் வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை ‘வந்தே மாதரம் பிள்ளை ‘ என்று அழைத்தார்கள் தலைவர்கள். இந்தியாவை ஆங்கிலேயர் சுரண்டிக்கொண்டு இருப்பதையும்,வர்த்தகத்தில் தங்களின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை வறுமையில் வாடவிடுவதையும் வ.உ.சி உணர்ந்தார். சுதேசி…
Read Moreஇன்று ஆசிரியர் தினம்
Teachers’ Day ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஓர் ஆசிரியரான அவர், தனது நண்பர்களும் மாணாக்கரும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.2014 இல் இந்நாளை பெயர் மாற்றம் செய்து , குரு உத்சவ் என்று கொண்டாட வேண்டுமென மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிக்கை வெளியிட்டது. ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் அந்நாளுக்குரிய கட்டுரைப் போட்டிக்கே அப்பெயர் இடப்பட்டுள்ளதாகவும் நடுவண் கல்வி அமைச்சர்…
Read More