சென்னை:திருப்பூரில் வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸ் முகமது சலீம், முகமது ராபின் உசையன் உள்பட 6 பேர் முறையான அனுமதியும் இல்லாமல் திருப்பூரில் இருந்தது தெரியவந்தது.பிறகு அந்த 6 பேரையும் வேலப்பாளையம் போலீசார் பிடித்து விசாரித்து உறுதி செய்தனர் . அவர்களை வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த 6 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர் . இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘முறையான அனுமதியில்லாமல் இந்தியாவில் தங்கியுள்ள வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேரும் பற்றியும் குடியுரிமை துறைக்கு தகவல் தெரிவித்து, அவர்களை சொந்த நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும்.இவர்களை சிறையில் வைப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் அவர்களை அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைக்க…
Read More சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேரை நாடு கடத்த வேண்டும்- சென்னை ஐகோர்ட்Category: செய்தி சிறகுகள்
கார்டு வடிவத்தில் வாகன ஆர்.சி. புத்தகம் – மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி:ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன ஆர்.சி. புத்தகத்தை பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில் வழங்க மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது .காகித வடிவத்தில் வழங்குவதை கைவிட்டு விட்டு பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில் வழங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக புதிய விதிமுறைகளை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. இந்த கார்டுகளை பி.வி.சி. அல்லது பாலி கார்பனைட்டால் மாநில அரசுகள் தயாரித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. இந்த கார்டுகளை தரமாக தயாரித்து கொள்ளும்படி மாநில அரசுக்கு கூறியுள்ளது. இதையும் படியுங்கள் எத்தியோப்பியவில் விமான விபத்து 4 இந்தியர்கள் உள்பட 157 பயணிகள் பலி பொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் பாலியல் வன்கொடுமை – தலைவர்கள் கண்டனம் உ.பியில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் இடையே முடிவான லோக்சபா தொகுதி
Read More கார்டு வடிவத்தில் வாகன ஆர்.சி. புத்தகம் – மத்திய அரசு அறிவிப்புஉயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மருத்துவர் குழு அமைப்போம்: ஆறுமுகசாமி ஆணையம்.
சென்னை: உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மருத்துவர் குழு அமைக்க தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருக்கிறது. தங்கள் மருத்துவர்களை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்ய தடை விதிக்க கோரி அப்பல்லோ வழக்கு தொடர்ந்தது. ஜெயலலிதா மரணம் சம்பந்தப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. News headline : Arumugasamy commission to form a Doctors Team to investigate on Jayalalitha death case இதையும் படியுங்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேரை நாடு கடத்த வேண்டும்- சென்னை ஐகோர்ட் ஜம்மு பஸ் நிலையத்தில் குண்டு வீசிய சிறுவன் கைது அரசு சாா்பில் ரூ.2 ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்க தடை இல்லை – நீதிமன்றம்
Read More உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மருத்துவர் குழு அமைப்போம்: ஆறுமுகசாமி ஆணையம்.திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க டிவி தொடர்கள் காரணமா என உயர்நீதிமன்றம் கேள்வி !
சென்னை: 2017ம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ரஞ்சித் கொலை செய்யப்பட்டார் . இதற்கு காரணம் திருமணத்தை மீறிய உறவுகள் தான். இது தொடர்பாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அஜித் குமார் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது திருமணத்தை மீறிய உறவுகளால் ஏற்படும் குற்றங்களில் ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க காரணம் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தான் காரணமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள், டிவி சிரீயல்கள், திரைப்படங்களில் காட்சிகள் பற்றியும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சுதந்திரம் காரணமாக திருமணத்துக்கு மீறிய உறவுகளை கணவனோ, மனைவியோ வைத்துக்கொள்கிறார்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். இந்த விவகாரம் குறித்து மத்திய மற்றும் மாநில…
Read More திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க டிவி தொடர்கள் காரணமா என உயர்நீதிமன்றம் கேள்வி !அரசு சாா்பில் ரூ.2 ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்க தடை இல்லை – நீதிமன்றம்
சென்னை:சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை விழுப்புரத்தைச் சோ்ந்த கருணாநிதி என்பவா் தாக்கல் செய்தார் . அந்த மனுவில், 2 ஆயிரம் ரூபாய் தர ஏழை குடும்பத்தை கண்டுபுடிப்பதில் தவறு நடப்பதாகவும் மற்றும் தேர்தலுக்காக தான் இந்த பணம் தருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நிதியுதவி தொடா்பான அரசாணையில் 9 போ் கொண்ட குழு என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் 7 போ் கொண்ட குழு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதாக பத்திாிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, இதில் இந்த நிதியை பெற தகுதியானவா்களை தமிழக அரசு முறையாக தான் தோ்வு செய்துள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனா். இதையும் படியுங்கள் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மருத்துவர் குழு அமைப்போம்: ஆறுமுகசாமி ஆணையம். சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேரை நாடு கடத்த…
Read More அரசு சாா்பில் ரூ.2 ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்க தடை இல்லை – நீதிமன்றம்சென்னை அண்ணாசாலையில் உள்ள ஏடிஎம்மில் கட்டுக்கட்டாக பணம் செலுத்திய வடமாநில இளைஞர்!
சென்னை: அண்ணா சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் ஒன்றில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு வடமாநில இளைஞர் பணம் செலுத்திக் கொண்டிருந்தார். அவர் நீண்ட நேரம் கட்டுக்கட்டாக பணம் செலுத்தி உள்ளார். அவரிடம் அருகில் இருந்த பையிலும் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்ட வாடிக்கையாளர் ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே இதை பற்றி அந்த வழியாக வந்த திருவல்லிக்கேணி காவலரிடம் தெரிவித்தார். பிறகு காவலர்கள் சம்மந்தப்பட்ட இளைஞரை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது தட்டுத் தடுமாறி தான் பதிலளித்தார் . அவரிடம் இருந்த மொத்த பணம் ரூ.17.8 லட்சம் இருந்ததாக கூறப்படுகிறது . பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது அவர் பெயர் ரத்தர் சாகிப் (29) என்றும் ,சென்னை மண்ணடியில் உள்ள நைனியப்பன் தெருவைச் சேர்ந்ததும்…
Read More சென்னை அண்ணாசாலையில் உள்ள ஏடிஎம்மில் கட்டுக்கட்டாக பணம் செலுத்திய வடமாநில இளைஞர்!பறிமுதல் செய்த டிராக்டர்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
பறிமுதல் செய்த டிராக்டர்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை ! சட்ட விரோதமாக மணல் அள்ளி கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. மதுரை: சட்டவிரேதமாக ஆற்றுப்படுகையில் மணல் அள்ளி கடத்தலில் ஈடுபட்டதாக பறிமுதல் செய்த டிராக்டர்களை உடனே விடுவிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இராமநாதபுரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் டிராக்டர்களை பறிமுதல் செய்தார்கள். இந்த நிலையில், அந்த டிராக்டர் உரிமையாளர் திரு.எஸ்.முருகன் இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்தார். இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முன் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை நீதிஅரசர் சுவாமிநாதன் விசாரணை செய்தார். அப்பொழுது முருகன் சார்பாக, இந்த டிராக்டகள் மணல் கடத்தலுக்காக பயன்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதைனையடுத்து திரு.எஸ்.முருகனுக்கு ரூபாய்…
Read More பறிமுதல் செய்த டிராக்டர்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மார்ச் 28-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியிலுள்ள வைத்தியநாதன் பதவி உயர்வு கோரிக்கை விடுத்து விண்ணப்பித்தார். இக்கோரிக்கையைப் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால் அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பல்கலைக்கழக மானியக்குழு விதியின் அடிப்படையில் உதவி பேராசிரியரின் கோரிக்கை பரிசீலிக்கபட வேண்டும் என்று பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவு பிறப்பித்ததை பல்கலைக்கழகம் செயல்படுத்த வில்லை. இதையடுத்து அவர் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேலுவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோதிமணி, உயர்நீதிமன்றம் உத்தரவை செயல்படுத்தாமல் பல்கலைக்கழகப் பதிவாளர்…
Read More நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவுநாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் சென்னை: பட்டா கோரிக்கை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்த நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகாவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து லோகநாதன் என்பவர் தொடர்ந்த ரிட் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. எனினும் அந்த ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டா வழங்க கோரிய மனுக்கள் பரிசீலனையில் உள்ளதால் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி லோகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த நீதியரசர் வேணுகோபால், மற்றும் நீதியரசர் வைத்தியநாதன் அடங்கிய அமர்வு, இவ்விவகாரத்தில்…
Read More நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்சட்ட விரோத பேனர் வழக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் நேரில் ஆஜராக உத்தரவு: உயர்நீதிமன்றம்
சட்ட விரோத பேனர் வழக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் நேரில் ஆஜராக உத்தரவு: உயர்நீதிமன்றம் சென்னை: சட்ட விரோத பேனர்வைத்ததற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி மார்ச் 13ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு காஞ்சிபுரம் கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுடிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் அரசியல் கட்சியினர், சாதி சங்கத்தினர், சமூக அமைப்பினர் பேனர் வைக்கபதற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இத்தடை உத்தரவை மீறி சென்னை மற்றும் கோவை உள்பட பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த பேனர்கள் பெரும்பாலும் சாலைகளின் குறுக்கேயும், நடைபாதையை மறித்துக்கொண்டும் ஆக்கிரமித்தும் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசு அதிகாரிகளே அனுமதி வழங்கி உள்ளதாகவும் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி குற்றச்சாட்டுகளை கூறி வந்துள்ளார். இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கு மதிக்காமல் முரணாக செயல்படுவதாக தலைமை செயலாளர், உள்துறை செயலர்,…
Read More சட்ட விரோத பேனர் வழக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் நேரில் ஆஜராக உத்தரவு: உயர்நீதிமன்றம்