Interim Stay due to Unsatisfied With CBCID Probe in Nirmala Devi case: Madras High Court(Madurai Bench)
Unhappy with CB CID probe in Nirmala Devi case, Madras High Court(Madurai Bench) issued interim stay for further Enquiry. The petitioner Conveyed that the CB-CID had deliberately not probed higher officials involved in this case and for whom Nirmala Devi was allegedly soliciting sexual activity obligations from the students.
Category: செய்தி சிறகுகள்
நீதிமன்ற வளாகத்தினுள்ளே நடந்த போலி நேர்முகத்தேர்வு : சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி
செங்கல்பட்டு 27பிப்ரவரி 2019: கீழமை நீதித்துறைக்கு ஆட்களை தேர்வு செய்வதாக கூறி, நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே போலி நேர்முக தேர்வு நடைபெற்ற சம்பவம் பற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறது. செங்கல்பட்டு, சட்டப் பணிகள் ஆணை குழு அலுவலகத்தினுள், தாலுகா அளவிலான சட்டப் பணிகள் குழுவிற்கு இளநிலை உதவியாளர்கள் வேலைக்கு ஆள் எடுப்பதாக கூறி, போலி நேர்முகத் தேர்வுவை நடத்தியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்கள். இந்த ஜாமின் மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. நேர்முகத்தேர்விற்க்காக 23 நபர்களை அழைத்து வந்த திண்டுக்கல்லை சார்ந்த மணி என்பவரை காவல்துறையினர் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது நீதிமன்ற வளாகத்தினுள்ளேயே போலி நேர்முக தேர்வு நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று நீதிபதி கூறினார். இவ்வழக்கில்…
Read More நீதிமன்ற வளாகத்தினுள்ளே நடந்த போலி நேர்முகத்தேர்வு : சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 53 வயது நபர்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரையை சேர்ந்தவர் மனோகரன்(53). ஊசி போடுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு நர்ஸ் வீட்டிற்குச் சென்றுள்ளார். இவர் நர்ஸ் வீட்டுக்கு சென்றபோது அங்கு அவர் இல்லை. அங்கு நுர்ஸ்யுடைய 12 வயது மகள் தனியாக இருந்ததால் அவரிடம் பேசியுள்ளார். வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்று தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார் . இதனால் அங்கிருந்து மனோகரன் தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயிடம் இதை பற்றி கூறியுள்ளார். இதையடுத்து இது சமந்தமாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடந்த சம்பவம் அடிப்படையில் மனோகரனை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செய்து பிறகு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். News Headline: 53-year-old Man was arrested…
Read More 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 53 வயது நபர்!கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி உபயோகபடுத்த அறநிலையத்துறைக்கு தடை!
தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை உபயோகப்படுத்த அறநிலையத்துறைக்கு தடை: உயர் நீதிமன்றம். சென்னை: 26பிப்ரவரி2019. சென்னை ஆலந்தூரில் இருக்கும் படவேட்டம்மன் கோவிலில் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் உபயோக படுத்தப்படுவதாகவும், அதனால் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளி கிழமைகளிலும், மேலும் விஷேச நாட்களிலும் அதிக சத்தத்துடன் பயன்படுத்துவதாக கோவிலுக்கு அருகே குடி இருக்கும் 75 வயது முதியவரான எம்.பீட்டர் வழக்கு தொடுத்துள்ளார். தன் வீட்டு ஜன்னலருகே வைக்கப்பட்டிருக்கும் 3 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளால் ஒலி மாசு ஏற்படுகிறது, ஆகையால் வயதான தனக்கும், தன் மனைவிக்கும் மட்டுமின்றி, பொதுத்தேர்வை எதிர்நோக்கியிருக்கும் தனது பேரனுக்கும் காலை முதல் இரவு வரையில் இந்த அமைதியற்ற சூழலும், அரசியல் அமைப்பு சட்ட்த்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்வுரிமையையும் பறிக்கும் வகையாக இருக்கிறது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது சம்பந்தமாக, இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு…
Read More கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி உபயோகபடுத்த அறநிலையத்துறைக்கு தடை!நீதிமன்றத்தில் போலீஸாருடன் நடந்த மோதல் வழக்கில் வழக்கறிஞர்கள் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை
கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் பல வழக்கறிஞர்களும், காவல் துறையினரும் படுகாயம் அடைந்தார்கள். சென்னை உயர்நீதிமன்ற மோதல் சம்பவம் தொடர்பான வழக்கில் வழக்கறிஞர்கள் மீது விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்மோதல் சம்பவம் தொடர்பாக, வழக்கறிஞர்களுக்கு எதிராகவும், காவல் துறையினருக்கு ஆதரவாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர்களுக்கு எதிரான இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 31 வழக்கறிஞர்களும் வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராகும்படி, எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், வழக்கறிஞர்களுக்கு எதிராக பாரபட்சமான முறையில் சிபிஐ தாக்கல் செய்துள்ள இடைக்கால குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டியும், எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு…
Read More நீதிமன்றத்தில் போலீஸாருடன் நடந்த மோதல் வழக்கில் வழக்கறிஞர்கள் மீதான விசாரணைக்கு இடைக்கால தடைலஞ்சம் வாங்கினால் ‘தூக்கு தண்டனை’ கொடுக்க வேண்டும் ; உயர் நீதிமன்றம் அதிருப்தி
மதுரை: ‘அரசாங்க சம்பளம் பெற்று, லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது தேசத்துரோக வழக்கு தொடுத்து, துாக்கில் போட வேண்டும். மேலும் அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்’ என்று, உயர்நீதிமன்ற, மதுரைக் கிளை அதிருப்தியை வெளியிட்டது. மதுரை, சூர்யா நகர் பரணிபாரதி தாக்கல் செய்துள்ள பொதுநல மனு பின்வருமாறு: தமிழக மின் வாரியத்தில், 325 உதவிப் பொறியாளர்கள் பணியிடங்களுக்கு, 2018 டிச., 30ல் எழுத்து தேர்வு நடைபெற்றது. சென்னை அண்ணா பல்கலை, தேர்வு நடத்தியது. வினாத்தாள் வெளியானதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அண்ணா பல்கலை விசாரணை நடத்தியது. பின், அரசின் இணையதளத்தில் வினாத்தாள், கீ பதில்களுடன் தேர்வு முடிவுகள் வெளியாகின. 1,575 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். நியமன உத்தரவுகள் வழங்கப்பட உள்ளன. வினாத்தாள் வெளியானது பற்றி, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். தேர்வு மற்றும்…
Read More லஞ்சம் வாங்கினால் ‘தூக்கு தண்டனை’ கொடுக்க வேண்டும் ; உயர் நீதிமன்றம் அதிருப்திதோட்டாக்களுடன் விமானத்தில் ஏற முயன்ற எம்.எல்.ஏ. கைது
டெல்லி:டெல்லி விமான நிலையத்தில் தோட்டாக்களை எடுத்துச்செல்ல அனுமதிக்க ஆவணங்கள் எதாவது இருக்கிறதா என விசாரித்தனர் . எதையும் அளிக்காததால் அவரை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.டெல்லி விமான நிலையத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. மொத்தம் பத்து தோட்டாக்களுடன் விமானத்தில் பயணிக்க முயன்றார். பீகார் மாநிலத்தில் உள்ள மதேபுரா தொகுதியின் எம்.எல்.ஏ. சந்திர சேகர் ஆவார் . அவர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்த்தவர். இவர் பிப்ரவரி 20ஆம் தேதி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் பையில் 10 தோட்டாக்கள் இருப்பதை விமான நிலைய சோதனையில் கண்டு பிடித்தனர் . அந்த தோட்டாக்கள் அனைத்தும் 3.15 போர் ரகம் என்று தெரியவந்தது . இதனால் அவர் விமானத்தில் பயணிப்பதை அதிகாரிகள் தடுத்தனர் . தோட்டாக்களை எடுத்துச்செல்ல அனுமதி ஆவணங்கள் இருக்கிறதா…
Read More தோட்டாக்களுடன் விமானத்தில் ஏற முயன்ற எம்.எல்.ஏ. கைதுஅரக்கோணம் அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது!
வேலூர் :அரக்கோணம் அடுத்து உள்ள களத்தூர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாஸ்கர் என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் .வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த உள்ள களத்தூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (வயது 35) அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இந்த காரணமாக சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது . இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சிறுமியிடம் கேட்டு உறுதியும் செய்தனர்.இது குறித்து அரக்கோணம் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் களத்தூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த தகவலை பற்றி செய்தியாளர்கள் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் விசாரித்தபோது அதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை என்று கூறி மறைக்க முயற்சி…
Read More அரக்கோணம் அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது!காஷ்மீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்
காஷ்மீர்:காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் உள்ள நபர் நடத்திய தாக்குதலில், தமிழக வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைத்தனர்.அதில் ஒருவர் பெயர் சுப்ரமணியன் மற்றவரின் உடல் இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. பயங்கர தாக்குதலில் மொத்தம் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 2 பேரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இந்த தாக்குதலில் தமிழக வீரர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணியன் வீரமரணம் அடைந்தது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த செய்தி கேட்டு சுப்ரமணியனின் உறவினர்கள் , நண்பர்கள் மற்றும் பலர் கண்கலங்கியுள்ளனர்.சுப்ரமணி சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. சிஆர்பிஎப் மூலம்…
Read More காஷ்மீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்காஷ்மீரில் நடந்த பெரிய தீவிரவாத தாக்குதலில் 42 வீரர்கள் பலி
ஸ்ரீநகர்: புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா டவுன் பகுதியில் தற்கொலை தீவிரவாதி தாக்குதலில் ஈடுபட்ட ஒருவன் 350 கிலோ வெடி மருந்து காரை ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற பேருந்து மீது மோதினான். இதில் ரிசர்வ் போலீஸ் படையினர் 42 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்த ரிசர்வ் போலீஸ் படையின் 70 பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.பஸ் மீது வாகனத்தால் மோதப்பட்டதும், அருகே மிகப்பெரிய சத்தத்தோடு மர்ம பொருள் வெடித்தது. இதையடுத்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது . ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத குழு இந்த தாக்குதலை நடத்தியத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. அடில் அகமது என்ற தீவிரவாதியை கைது செய்துள்ளனர் .…
Read More காஷ்மீரில் நடந்த பெரிய தீவிரவாத தாக்குதலில் 42 வீரர்கள் பலி