சென்னை :திமுக எம்.பி. கனிமொழி 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி திண்டிவனத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமியை கடுமையாக விமர்சித்திருந்தார்.இதனால் அக்டோபர் மாதம் முதலமைச்சர் சார்பில் திமுக எம்.பி. கனிமொழி மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ஜூன் 4ஆம் தேதி நேரில் ஆஜராக கனிமொழிக்கு சம்மன் அனுப்பியது.விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற சம்மனை ரத்து செய்யக் கோரியும், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் விழுப்புரம் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தும்,ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.இது குறித்து தமிழக அரசு நான்கு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டார். இதையும் படியுங்கள் ரஃபேல் ஒப்பந்தம் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு…
Read More திமுக எம்.பி கனிமொழி மீதான அவதூறு வழக்கு விசாரனைக்கு தடை :சென்னை உயர்நீதிமன்றம்Category: செய்தி சிறகுகள்
வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகைச் சீட்டுகளை சரி பார்க்க கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்
டெல்லி: வாக்கு எண்ணிக்கையின் போது 50 சதவீத வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.தலா 5 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் மனு தாக்கல் செய்தனர்.ஆனால் கடந்த மே 7 ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதன் பிறகு சென்னையைச் சேர்ந்த ஒரு அமைப்பு பொது நல மனுவாக தாக்கல் செய்தது.அந்த மனுவில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றும் ,100 சதவீதம் இந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு இன்று விடுமுறைக்கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அந்த வழக்கில் தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது என கூறி மனுவை…
Read More வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகைச் சீட்டுகளை சரி பார்க்க கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்கமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்
சென்னை :கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.இந்த கருத்தால் அகில இந்திய அளவில் எதிர்ப்புகள் எழுந்தன.இந்த பேச்சுக்கு எதிராக 76 இடங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவானது. இதனால் கைதாவதை தடுக்க முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கினார்கள் . அரவக்குறிச்சி 4ஆவது நீதித்துறை நடுவர் மன்றம் முன்பு 15 நாட்களுக்குள் ஆஜராகி இரண்டு நபர்களின் உத்தரவாதத்துடன் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தி முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளனர். இதையும் படியுங்கள் வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகைச் சீட்டுகளை சரி…
Read More கமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராவதை தவிர்த்து வருவதற்கு நீதிமன்றம் கடும் கண்டனம்
மும்பை: மகாராஷ்டிராவில் மாலேகான் நகரில் உள்ள ஒரு மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி நடைபெற்றது .வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் பெண் துறவி பிராக்யா சிங் தாகூர்,ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபத்யாய உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர். ஜாமினில் வெளிவந்த பிராக்யா சிங் தாகூர் நடந்துவரும் மக்களவை தேர்தலில் போபால் தொகுதியின் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.இன்று மும்பையில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி விநோத் பதால்கர் முன் விசாரணைக்கு வந்தது.குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் நேரில் ஆஜராவதை தவிர்த்து வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.…
Read More மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராவதை தவிர்த்து வருவதற்கு நீதிமன்றம் கடும் கண்டனம்ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சுசன் எம் குப்தாக்கு ஜாமீன் மறுப்பு:டெல்லி நீதிமன்றம்
டெல்லி:சுசன் எம் குப்தா அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேட்டில் இடைதரகராக செயல்பட்டார்.அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. பிறகு அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.மேலும் அவரை நீதிமன்ற காவலில் வரும் 23-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதையும் படியுங்கள் கமல்ஹாசனுக்கு எதிரான மனு தள்ளுபடி:டெல்லி உயர்நீதிமன்றம் மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு தனியார் மருத்துவமனை கட்டிடத்திற்கு சீல்:சென்னை உயர்நீதிமன்றம்
Read More ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சுசன் எம் குப்தாக்கு ஜாமீன் மறுப்பு:டெல்லி நீதிமன்றம்தனியார் மருத்துவமனை கட்டிடத்திற்கு சீல்:சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை :ஷெனாய் நகரில் தனியார் மருத்துவமனை உள்ளது.அதில் பல நோயாளிகள் சிகிச்சை வருகின்றனர்.அரும்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அதில் ஷெனாய் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் விதிகளை மீறி அடுக்குமாடி கட்டிருப்பதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டிக்க உத்தவிட்டனர்.மேலும் கட்டடத்திற்கு சீல் வைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு பாதிப்பு வராமல் இருக்க வேறு மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதையும் படியுங்கள் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சுசன் எம் குப்தாக்கு ஜாமீன் மறுப்பு:டெல்லி நீதிமன்றம் கமல்ஹாசனுக்கு எதிரான மனு தள்ளுபடி:டெல்லி உயர்நீதிமன்றம் அயோத்தி நிலச் சர்ச்சை விவகாரம்: மத்தியஸ்த குழுவிற்கு அவகாசம் அளித்த உச்சநீதிமன்றம்
Read More தனியார் மருத்துவமனை கட்டிடத்திற்கு சீல்:சென்னை உயர்நீதிமன்றம்அயோத்தி நிலச் சர்ச்சை விவகாரம்: மத்தியஸ்த குழுவிற்கு அவகாசம் அளித்த உச்சநீதிமன்றம்
டெல்லி: அயோத்தி நிலச் சர்ச்சை வழக்கு அலகாபாத் உயநீதிமன்றத்தில் நடைபெற்றது.அந்த வழக்கில் சர்ச்சைக்குறிய நிலத்தை 3 அமைப்புகள் சமமாக பிரித்துக் கொள்ளும்படி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதற்காக 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டது. வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்தியஸ்த குழு நிலப்பங்கீடு பற்றி கேட்டனர்.மத்தியஸ்த குழு நிலப்பங்கீடு தொடர்பாக தங்களுக்கு மேலும் அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தனர். மத்தியஸ்த குழுவுக்கு ஆகஸ்ட்15 ஆம் தேதி வரை நீதிபதிகள் அவகாசம் அளித்தனர். இதையும் படியுங்கள் தனியார் மருத்துவமனை கட்டிடத்திற்கு சீல்:சென்னை உயர்நீதிமன்றம் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சுசன் எம் குப்தாக்கு ஜாமீன் மறுப்பு:டெல்லி நீதிமன்றம் மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு கோகுல்ராஜ் கொலை வழக்கு மாற்றம் –…
Read More அயோத்தி நிலச் சர்ச்சை விவகாரம்: மத்தியஸ்த குழுவிற்கு அவகாசம் அளித்த உச்சநீதிமன்றம்மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு கோகுல்ராஜ் கொலை வழக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை :சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் பொறியியல் படித்து வந்தார்.அவர் படிக்கும் போது வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த வந்தார் .இவர் 2015ம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 17 பேருக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோகுல்ராஜின் தாய் சித்ரா மனுதாக்கல் செய்தார் .அந்த மனுவில் வழக்கை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவு விட குறிப்பிட்டுள்ளது.அதுமட்டும் இல்லாமல் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜின் ஆதரவாளர்களின் மிரட்டலால் அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறி விட்டதாகவும், நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நியாயமாக நடக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது .இந்த மனுவை விசாரித்த…
Read More மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு கோகுல்ராஜ் கொலை வழக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம்முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை வழக்கு:விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி: பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி சசிகலா புஷ்பா மற்றும் அவரின் முதல் கணவர் லிங்கேஸ்வர திலகன் மற்றும் மகன் ஆகியோர் மீது தூத்துக்குடியை சேர்ந்த பணிப்பெண் பாலியல் புகார்களை தெரிவித்தார். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.விசாரணைக்கு தடை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.ஆனால் அந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.மேலும் சசிகலா புஷ்பாவை பணிப்பெண்களின் வழக்கறிஞர் சுகந்தி வீட்டை தாக்கியதாக கூறிய வழக்கில் இருந்தும் விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுத்திவிட்டது.சசிகலா புஷ்பாவை நீதிமன்ற விசாரணை முடியும் வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையும் படியுங்கள் மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு கோகுல்ராஜ் கொலை வழக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம் அயோத்தி நிலச் சர்ச்சை விவகாரம்: மத்தியஸ்த…
Read More முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை வழக்கு:விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்புசபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் தடை
டெல்லி : கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக 3 அதிமுக எம்.எல்.ஏ கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடன் அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். மூன்று எம்எல்ஏக்கள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி மூன்று அதிமுக எம்.எல்.ஏ கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.அந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு விசாரித்தது.தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதையும் படியுங்கள் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை வழக்கு:விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு கோகுல்ராஜ் கொலை வழக்கு மாற்றம் – சென்னை…
Read More சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் தடை