வைகோ மீதான தேச துரோக வழக்கு ஜூலை 5ஆம் தேதி தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி அவர் மீது ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அவர் இந்திய அரசுக்கு எதிராகவும் , விடுதலைப்புலிகளுக்கு ஆதரிக்கவும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை 2009ல் ஆயிரம்விளக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கின் தீர்ப்பு வருகின்ற ஜூலை மாதம் ஐந்தாம் தேதி என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Read More

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: மேற்கு வங்காளத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10-ந் தேதி இறந்தார்.பிறகு நோயாளியின் உறவினர்கள் 2 பயிற்சி மருத்துவர்களை தாக்கினார்கள் .இதனால் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று கொல்கத்தாவில் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Read More

உச்சநீதிமன்றத்தில் அரசு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிய மனு நாளை விசாரணை வருகிறது

டெல்லி : மேற்குவங்க மாநிலத்தில் நோயாளி இறந்ததால் 2 பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டனர்.இதனால் இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலையை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து மாநில மத்திய உறுதி செய்ய வேண்டும் என்று போராட்டத்தின் போது மருத்துவர்கள் கோரிக்கையை வைத்துள்ளனர்.வழக்கறிஞர் அலாக் அலோக் ஸ்ரீவஸ்தவா கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..இந்த மனுவை அவசரமாக விசாரிக்க இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சூர்யகாந்த் அடங்கிய அமர்வு இன்று மனுவை பரிசீலித்தது. நீதிபதிகள் மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிவித்தனர்.இந்த போராட்டத்தால் பல நோயாளிகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

சென்னை மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசின் நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: வேலூரில் கழிவுநீர் கால்வாயில் கலப்பதை எதிர்த்து பொது நல வழக்கு தொடரப்பட்டது.நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் அடங்கிய அமர்வு முன்பு அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது சென்னை புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள். இது சம்மந்தமாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது.கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்தும் கேட்கப்பட்டது.விவரங்களை வரும் 17ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

Read More

ராஜ ராஜ சோழன் குறித்து பேசிய சர்ச்சையால் முன் ஜாமின் கோரிய இயக்குநர் பா.ரஞ்சித்

மதுரை : நீலப்புலிகள் அமைப்பின் சார்பாக ஜூன் மாதம் 5-ம் தேதி உமர் பாருக்கின் நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது.இயக்குநர் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.அவர் ராஜராஜ சோழனின் காலம்தான் இருண்ட காலம்’ என்று,ராஜராஜ சோழன் காலத்தில் தான் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் காவல்நிலைய போலீஸ் இயக்குநர் ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதனால் பா. ரஞ்சித் முன் ஜாமின் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Read More

ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விசாரிக்க விருப்பம் இல்லாமல் விலகிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

சென்னை: கடந்த ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி பொதுமக்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர். அதில் மூன்று அப்பாவி பொதுமக்கள் காவல்துறை நடத்திய துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூடி சீல் வைத்து உத்தரவிட்டது. ஆலையை திறக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரிக்க தனக்கு விருப்பமில்லை என நீதிபதி சசிதரன் கூறி விலகியுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க வேறு நீதிபதி நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

Read More

பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் பொதுக்கூட்டத்திக்கு அனுமதி கிடையாது – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சீர்காழி பேருந்து நிலையத்தில் நாளை வட இந்தியர்களின் வேட்டைக் காடாகும் தமிழகம் என்ற பெயரில் வடஇந்தியர்களுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த தடைவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த ஆனந்த் வெங்கடேஷ் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் எந்த பொதுக்கூட்டத்தைக்கும் அனுமதி வழங்க முடியாது என கண்டனம் தெரிவித்தார்.வேறு தலைப்புடன் கூட்டம் நடத்துவது தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்தார்.விசாரணையை வரும் 14 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Read More

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி குறித்து அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை :மெரினா கடற்கரையில் போராட்டங்கள் முன்பு நடந்துள்ளது.சென்னையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் .அந்த மனுவில் அரசியல் கட்சிகள், சங்கங்கள், சில அமைப்புகள் மெரினா கடற்கரையை போராட்டங்களுக்காக தோ்வு செய்கின்றனா். இதனால் போக்குவரத்து மற்றும் சுற்றுலா வருபவர்கள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.2018 செப்டம்பா் 3ம் தேதி மெரினாவில் போராட்டம் நடத்த உயா் நீதிமன்றம் தடை விதித்ததையும் குறிப்பிட்டிருந்தாா். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதி கோாியது தொடா்பாகவோ, நடத்தப்பட்டது தொடா்பாகவோ எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை .இதனால் ஹரிகிருஷ்ணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்

Read More

கிரண்பேடி கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் மத்திய அரசு அதிகாரம் வழங்கியது.இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஷ்மி நாராயணன் எம்.எல்.ஏ வழக்கு தொடர்ந்தார் .கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.உயர்நீதிமன்றம் வழங்கிய அதிகாரம் ரத்து செய்யும் தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது . இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தது. 7 -ஆம் தேதி நடைபெற இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் கவர்னர் பங்கேற்று ஆலோசனை கூறலாம் என்றும் ,ஆனால் .திட்டங்களை கவர்னரே செயல்படுத்த கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்த வழக்கில் எதிர் மனுதாரராக முதல்வரையும் சேர்க்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு வரும் 21-ஆம்…

Read More

சிலை கடத்தல் வழக்கை விசாரித்த சிறப்பு தனி அமர்வு கலைப்பு – உயர்நீதிமன்றம்

சென்னை:தமிழ்நாடு கோவில்களில் பழமையான சிலைகள் கடத்தப்பட்டது.சிலைகளை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கடத்தி,அதை சர்வதேச கடத்தல் கும்பலிடம் விற்பனை செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்ற நீதிபதி மகாதேவன், ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு படையை உருவாக்கப்பட்டது .கும்பகோணம் தலைமை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தை சிறப்பு நீதிமன்றமாக அறிவித்தார். தமிழகம் முழுவதும் காணாமல் போன சிலைகள் குறித்து இந்த தனிப்படை விசாரிக்க உத்தரவிட்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அனைத்து சிலை கடத்தல் வழக்குகளையும் இரண்டு நிதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு கொண்ட அமர்வை நியமித்து உத்தரவிட்டார். இன்று இந்த அமர்வை கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More