கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற சனிக்கிழமை அன்று பிரதமர் அலுவலகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கனவே பத்ம விபூஷண் விருதைப் பெற்றுள்ள சச்சினும் (40), சி.என்.ஆர். ராவும் (79) இப்போது பாரத ரத்னா விருது பெற்றுள்ள 41 தலைசிறந்த பிரபலங்களின் பட்டியலில் இணைந்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 16 வயதில் கிரிக்கெட் உலகில் நுழைந்த சச்சின் 24 ஆண்டுகளாக அந்த விளையாட்டில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். விளையாட்டு உலகின் உண்மையான இந்தியத் தூதராக அவர் விளங்குகிறார். அவரது சாதனைகள் ஈடுஇணையற்றவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாரத ரத்னாவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விளையாட்டுத் துறையில் பாரத ரத்னா விருதைப் பெறும் முதல் நபர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சச்சின் பேசியபோது, இந்த விருதை எனது தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். பேராசிரியர் சிந்தாமணி நகேச ராமச்சந்திர ராவ் (சி.என்.ஆர். ராவ்), வேதியியல் துறையின் தலைசிறந்த விஞ்ஞானி.இதுவரை 1,400-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். சர் சி.வி.ராமன், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு அடுத்தபடியாக பாரத ரத்னா விருது பெறும் 3-வது விஞ்ஞானி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
தற்போது அவர், பிரதமரின் அறிவியல் ஆலோசகர் குழுத் தலைவராக உள்ளார். செவ்வாய்க் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய திட்டத்துக்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டவர். 4 ஆண்டுகளுக்குப் பின் கலை, இலக்கியம், அறிவியல், பொது சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் குடிமக்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.
1954 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 41 பேர் பாரத ரத்னா விருதினைப் பெற்றுள்ளனர். சுதந்திரத்திற்கு பிறகு நேரு இந்திரா எம் ஜி ஆர் இவர்களுக்கு பிறகு சச்சின் பெறுகின்றார்.
கடைசியாக ஹிந்துஸ்தானி இசை மேதை பீம்சென் ஜோஷிக்கு கடந்த 2009-ல் பாரத ரத்னா வழங்கப்பட்டது. அதன் பின்னர் யாருக்கும் விருது வழங்கப்படவில்லை. 4 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது சச்சினுக்கும் சி.என்.ஆர். ராவுக்கும் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. 42-வது நபராக சி.என்.ஆர். ராவும், 43-வது நபராக சச்சினும் விருதினைப் பெற உள்ளனர்.
வீடியோ இணைப்பு : https://www.youtube.com/watch?v=DvhNW6GwdRk
The government announced on Saturday, 16 November, that the country’s highest civilian order, the Bharat Ratna would be bestowed on cricket great Sachin Tendulkar and scientist, Professor Chintamani Nagesa Ramachandra Rao, the man behind India’s maiden Mars mission. Tendulkar will become the first sportsperson to receive a Bharat Ratna, India’s highest civilian honour, the country’s government announced hours after the batting great’s 200th and final test ended on Saturday.
இதையும் படியுங்கள்
- ஐ.பி.எல். முதல் ஆட்டத்தில் கொல்கத்தா ரைடர்ஸ் வெற்றி
- நான் கிரிக்கெட் கடவுளா' மனம் திறக்கிறார் சச்சின்
- வெஸ்ட் இண்டிஸ் இந்தியா கிரிக்கெட் போட்டி இந்தியா வெற்றி. கண்ணீருடன் சச்சின் விடை பெற்றார்.
- லஞ்சம் கேட்பது அரசுப் பணியின் ஒரு பகுதியா? ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17A பாதுகாப்பு கிடையாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்
- குழந்தைகளுக்கும் இணையப் பயன்பாடு அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? வயது அடிப்படையிலான முழுத் தடை ஏன் ஏற்கப்படவில்லை?
- ஹோண்டா XR300L, XR300 Rally இந்திய அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் விலை, என்ஜின், வசதிகள்
- ஜம்மு-காஷ்மீரில் 150 வங்கதேசத்தவர் நாடு கடத்தல்: சட்ட நடைமுறை என்ன?
← முந்தைய செய்தி: டெல்லி தேர்தலில் ஷீலா தீட்சித் எதிராக கேஜரிவால் போட்டி
அடுத்த செய்தி →: இலங்கைக்கு இங்கிலாந்து பிரதமர் கெடு. திமிர் பதில் கொடுத்த ராஜபக்சே



