Stalin supports actor vijay
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்போம் என்று திமுக பொருளாளர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனந்த விகடனுக்கு சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில்,
கேள்வி: விஸ்வரூபம், தலைவா பட சிக்கல் குறித்த கருத்து
பதில்: கலைத் துறையில் இருந்து வந்தவர் என்பதால், சினிமாவுக்கு எதிராக ஜெயலலிதா இருப்பார் என்று நான் கருதவில்லை.
ஆனால் விஸ்வரூபம் எடுப்பவர்களையும், தலைவராகக் கருதிக்கொள்பவர்களையும் அடங்கிப் போகச் செய்ய வேண்டும், தலைவணங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா கையாண்ட அஸ்திரம் அது.
எல்லாப் பாளையக்காரர்களும் பணிந்துவிட்டார்கள், பலன் அடைகிறார்கள். நீ மட்டும் பணியாதிருப்பதால், உனக்கு அது என்ன லாபமா? என்று ஜாக்ஸன் துரை, கட்டபொம்மனிடம் கேட்கும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது.
தன்னை மிஞ்சி யாரும் அரசியல் நடத்தக் கூடாது என்று நினைக்கும் ஜெயலலிதா, இப்படிச் செயல்படுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை! என்று கருத்து கூறியுள்ளார்.
கேள்வி: நடிகர் விஜய், அரசியலில் ஈடுபட்டால் வரவேற்பீர்களா?
பதில்: நடிகர்கள் மட்டுமல்ல, வேறு எந்தத் துறையில் இருப்பவர்களும் பொதுப்பணியில் நாட்டம் கொண்டு அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்.
இது ஜனநாயக நாடு. இன்னார்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று எல்லைக்கோடு போட முடியாது என்று தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
we support actor vijai, m.k.stalin (D.M.K)
Stalin supports actor vijay
இதையும் படியுங்கள்
- அமெரிக்காவை எச்சரித்து விளாதிமிர் புதின் அறிக்கை
- சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்காவிற்கு செனட் சபை ஒப்புதல்
- சீனாவில் உள்ள ஆற்றில் 100 டன் மீன்கள் செத்து மிதந்தன
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- விஜய் தேர்தல் வழக்கு: குழந்தைகளிடம் கேட்டது ஊழல் நடைமுறை ஆகாது; சேலம் வடக்கு தேர்தல் மனுவை நிராகரிக்கும் நிலையில் உயர் நீதிமன்றம்
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
- கவின் ஆணவக் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகை ரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
← முந்தைய செய்தி: ஆப்கன் பார்லிமென்ட்டில் இந்துக்களுக்கு இடஒதுக்கீடு
அடுத்த செய்தி →: சீனாவில் உள்ள ஆற்றில் 100 டன் மீன்கள் செத்து மிதந்தன

