ஆள்துளை கிணறு பணி தொடங்குவதற்கு முன் உச்சநீதிமன்றம் பிறப்பித்த கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள்

டெல்லி:ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழும் நிகழ்வுகள் நாடு முழுவதும் அதிகரித்ததைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து உத்தரவு பிறப்பித்தது.புதிய ஆழ்துளை கிணறு பணி தொடங்குவதற்கு முன்பும் நிறைவடைந்த பின்பும் சம்பந்தப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.ஆழ்துளை கிணற்றை முழுமையாக மூட இரும்பு மூடி பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.ஆழ்துளை கிணற்றில் விழுந்து யாராவது உயிரிழந்தால் இடத்தின் உரிமையாளரும் ,தோண்டிய ஒப்பந்ததாரரும் தான் பொறுப்பு என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Related posts