பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த அனுமதி கோரிய வழக்கில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூபாய் 1000, 500 ஆகிய பழைய நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.பழைய ரூபாய் 1000, 500 ஆகிய நோட்டுகளை வங்கியில் செலுத்த டிசம்பர் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளித்தது மத்திய அரசு.மதுரையைச் சேர்ந்த ராமன் கணக்கு வைத்துள்ள வங்கியில் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் செலுத்த சென்றார்.ஆனால் வங்கி மறுத்தது.இதனால் ராமனுக்கு எதிராக செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த அனுமதிக்க கோரி ரிசர்வ் வங்கிக்கு ராமன் மனு அனுப்பினார்.ஆனால் ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது .பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ராமர். மனு நீதிபதிகள் என்.வி. ரமணா, இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related posts