சென்னை :திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வாகனத்திற்கு நுழைவு கட்டணத்தை ஒப்பந்தம் அடிப்படையில் வசூலித்து வந்தனர்.மேலும் 3 ஆண்டுகள் வசூலிப்பதற்கான அறிவிப்பாணையை கடந்த பிப்ரவரி13 ம் தேதி திருவேற்காடு நகராட்சி ஆணையர் வெளியிட்டிருந்தார்.நுழைவு கட்டணம் வசூலிக்க நகராட்சி ஆணையர் பிறப்பித்த அறிவிப்பாணை ரத்து செய்து, நுழைவு கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பெடரேஷன் ஆஃப் கன்சூயூமர் ஆர்கனைசேஷன் என்ற அமைப்பின் பொது செயலாளர் பாலசுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார். மனு நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது .மனுவை விசாரித்த நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு நுழைவுக் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்தனர். இதற்கு பதில் அளிக்க நகராட்சி நிர்வாகம் ,குடிநீர் வழங்கல் துறை…
Read MoreYear: 2020
பாலியல் சுரண்டல் வழக்கில் சின்மயானந்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி :பாலியல் சுரண்டல் வழக்கில் சின்மயானந்திற்கு ஜாமீன் வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஷாஜகான்பூர் சட்ட மாணவர் தாக்கல் செய்த சிறப்பு விடுப்பு மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் நவின் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மனு விசாரணைக்கு வந்தது .மனுவை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் நவின் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை .மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சியங்களை சேதப்படுத்தவோ அல்லது சாட்சிகளை அச்சுறுத்தவோ மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த நீதிமன்றம் போதுமான நிபந்தனைகளை விதித்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
Read Moreஇளையராஜா – பிரசாத் ஸ்டூடியோ இடையிலான வழக்கை விரைவில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவின் இசை கூடம் உள்ளது .அங்கு 35 வருடங்களாக இசையமைத்து வந்தார்.சில மாதங்களுக்கு முன்பு இசை கூடத்தை காலி செய்யும்படி பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் இளையராஜாவை வற்புறுத்தியது.இட உரிமை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையிலான வழக்கு ஏற்கனவே 17வது உதவி நகர சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா மனுதாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 2 வாரங்களில் நிலுவையில் உள்ள வழக்கை முடிக்க உத்தரவிட்டது.
Read Moreஅரசியல்வாதிகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது குறித்து முடிவு செய்யுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு
டெல்லி: பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா, கபில் உள்ளிட்ட அரசியல்வாதிகள் வெறுக்கத்தக்க உரைகள் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் புதன்கிழமை டெல்லி காவல்துறை கமிஷனருக்கு உத்தரவிட்டது. டெல்லி காவல்துறையில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நீதிபதிகள் எஸ் முரளிதர் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை நிறைவேற்றியது.
Read Moreஉ.பி. காவலர்களுக்கு எதிராக நடவடிக்கை – அலகாபாத் உயர்நீதிமன்றம்
அலகாபாத்:அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் “மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்திய காவலர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட மாணவர்களை தேவையில்லாமல் தடுத்து நிறுத்திய காவல்துறையினரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்குமாறு திங்களன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உ.பி. அரசின் காவல்துறை டைரக்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டது.தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் மற்றும் நீதிபதி சமித் கோபால் ஆகியோர் அடங்கிய பிரிவு அமைவு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Read Moreஐந்தரை வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை -சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம்
பிலாஸ்பூர்:ஐந்தரை வயது சிறுமியை 25 மே 2015 அன்று பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்ததாக ராம் சோனா குற்றம் சாட்டப்பட்டார் . சட்டீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரஷாந்த் குமார் மிஸ்ரா மற்றும் கவுதம் சவுர்தியா ஆகியோர் அடங்கிய அமர்வு சிறுமியை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனையை உறுதி செய்தனர்.
Read Moreநிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மார்ச் 3 அன்று காலை 6 மணிக்கு தூக்கு – டெல்லி நீதிமன்றம்
டெல்லி:மார்ச் 3 ம் தேதி காலை 6 மணிக்கு நிர்பயா கும்பல் கொலை வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் அக்ஷய் சிங் ஆகிய நான்கு குற்றவாளிகளை தூக்கிலிட டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றங்களின் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா, புதிய மரண உத்தரவு பிறப்பித்தார்.
Read Moreஆசிரியர் பதவிகளுக்கு 100% பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்களுக்கு முன்னுரிமை : உச்சநீதிமன்றம்
டெல்லி:பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்களுக்கு,ஆசிரியர் பதவி இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு , திட்டமிடப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில், ஆசிரியர்களின் பதவிகளில் 100% இடஒதுக்கீடு பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்களுக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கப்பட்டது.
Read Moreநீதிபதியின் மனைவி மற்றும் மகனை கொலை செய்த காவல்துறை அதிகாரிக்கு மரண தண்டனை -ஹரியானா நீதிமன்றம்
ஹரியானா:குற்றவாளி மஹிபால், நீதிபதி கிருஷ்ணா காந்த் ஷர்மாவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார். அக்டோபர் 13, 2018 அன்று நீதிபதி கிருஷ்ணா காந்த் ஷர்மாவின் மனைவி மற்றும் மகன் துருவ் ஆகியோரை குருகிராமில் உள்ள ஆர்கேடியா சந்தைக்கு அழைத்துச் சென்றார்.அங்கு அவர் இருவரையும் பொது மக்கள் முன் சுட்டுக் கொன்றார்.இந்த வழக்கு நீதிபதி சுதீர் பர்மர் முன் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதீர் பர்மர், நீதிபதியின் மனைவி மற்றும் மகனை கொலை செய்த காவல்துறை அதிகாரிக்கு மரண தண்டனை வழங்கினார்.
Read Moreகுடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை:நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சிவமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பிப்ரவரி 26ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.செய்ய தவறினால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
Read More