பணவீக்கம் கட்டுக்குள் வர யுக்தி – வீடு மற்றும் கார் கடன் வட்டி உயர்வு

The Increase of Repo Rate by Reserve Bank of India – 25 Basis Points to 7.75 % from 7.50%

The Increase of Repo Rate by Reserve Bank of India - 25 Basis Points to 7.75 % from 7.50%

மும்பை : ரெப்போ எனும் வங்கிகளுடைய குறைந்த கால வட்டி விகிதத்தை ரிசர்வ் பேங்க் 0.25 % உயர்த்தியிருக்கிறது. அதே வேளையில் நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி விகிதம் 0.50 சதவீத அளவுக்கு குறைந்திருக்கிறது. பணவீக்கம் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டதாக ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம்ராஜன் கூறினார்.

இன்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், மத்திய ரிசர்வ் வங்கியினுடைய மாதாந்திர கடன் வெளியீட்டு கொள்கையை வெளியிட்டு பேசுகையில், ரெப்போ வட்டி விகிதம் 7.50 சதவிகிதத்தில்  இருந்து 7.75 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில் எம்.எஸ்.எப். வட்டி 9 சதவிகிதத்தில் இருந்து 8.75 சதவிகிதமாக குறைத்திருக்கிறோம். சி.ஆர்.ஆர். எனும் ரொக்க கையிருப்பு விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யவில்லை, முன்பு நடைமுறையில் உள்ள 4 சதவீதமே தொடரும் .

விவசாய தொழிலில் நல்ல ஏற்றம் : தற்சமயம் நம் நாட்டு பொருளாதார வளர்ச்சி 5.5 % என்று நிர்ணயிக்கப்ட்டிருந்ததை 5 % மாக குறைந்திருக்கிறது. 9 % என்ற நிலையில் உள்ள சில்லரை வர்த்தக பணவீக்கம் அப்படியே தொடரும். நாட்டின் மொத்த பணவீ்க்கம் தொடர்ந்து கூடுதலாகும். அந்த பண வீக்கத்தை குறைக்க அவசியமான பல நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் நடப்பாண்டின் 2 -ம் கால் ஆண்டில் ஏற்றுமதி மற்றும் விவசாயத்தில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும் என ரகுராம் கூறினார்.

The Increase of Repo Rate by Reserve Bank of India – 25 Basis Points to 7.75 % from 7.50%

Related posts