இந்திய திரைபட நூற்றாண்டு விழா தமிழக முதல்வரால் சனிக்கிழமை அன்று துவக்கி வைக்கப்பட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்க உள்ளன. இதில் துவக்க நாளான சனிக்கிழமை முக்கிய சிறப்பு படைப்பாளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வும் இந்திய சினிமா 100யை பற்றிய குறும் படமும் ஒளிபரப்பப்பட்டது.
தமிழ் திரைப்படத்திற்காக பாடுபட்டு உழைத்த யாரையும் முக்கியத்துவம் கொடுத்து பேசப்படவும் இல்லை அவர்களின் புகை படத்தையும் இந்த குறும்படமும் விழாவும் ஒளிபரப்பவில்லை.
பொதுவாக நடக்க வேண்டிய விழாவை அரசியல் விழா போன்று மாற்றிவிட்டார்கள் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மாற்றத்திற்கு காரணமாய் இருந்த கலைஞ்சரை பற்றிய சிறிய தகவல் கூட அங்கு பரிமாறவோ சொல்லவோ விழாவில் அனுமதி இல்லை என்பது போல் தெரிந்தது.
கண்ணதாசனும் வாலியும் பேச்சளவிலும் பட்டுக்கோட்டை அழகிரி வார்த்தை அளவிலும் மட்டுமே இருந்தனர், எம் ஜி ஆர் மட்டுமே தமிழ் சினிமாவை உயர்த்தியது போல் அந்த விழா இருந்ததாக பல ஊடகங்கள் செய்திகள் ஒலிபரப்பி உல்லன.
சினிமா நூற்றாண்டு விழா அதில் தமிழ் சினிமாவில் முக்கியமான இடம் வகிக்கும் கலைஞ்சர் இல்லாமல் நடத்தப்படுவது மிகவும் தவறான அரசியல் போக்கையும் வரலாற்றை கொச்சைபடுத்தும் விதமாகவும் இந்த விழா இருக்கின்றது என பல சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியை பற்றிய செய்தியை நேரடியாக ஒளிபரப்ப ஜெயா டிவி மட்டுமே தொடர்ந்து வருகின்றது, மற்ற எந்த தொலைக்காட்சிக்கும் உள்ளே அனுமதி இல்லை என்பது குறிப்பிட தக்கது.
ஒரு மாநிலத்தின் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்வு எதுவாக இருந்தாலும் அதனை பொது நிகழ்வாக மட்டுமே கருத வேண்டும் அனால் அதுவும் இங்கு அரசியல் ஆக்கப்பட்டது இந்து கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து வருவதாகவும் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் சொந்த தொலைக்காட்சிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என பல தொலைக்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
சினிமா 100 விழாவும் நூற்றாண்டு விழாவாக இல்லாமல் அரசிய சார்ந்த நிகழ்ச்சியாகவே இருக்கிறது என பல சினிமா சார்ந்த பிரபலங்கள் தெரிவித்தனர்..