பிரதமர் மோடிக்கு எதிரான சுவரொட்டிகள்: பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை அனைத்தையும் ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

Supreme court of India

டெல்லி: கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் தேசிய தடுப்பூசி கொள்கை தொடர்பாக பிரதமர்
நரேந்திர மோடியை விமர்சிக்கும் சுவரொட்டிகள் வெளியிட்டவர்களுக்கு எதிராக
டெல்லி காவல்துறை பதிவு செய்த அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் ரத்து
செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் பிரதீப் குமார் யாதவ் தாக்கல் செய்த மனுவில், பேச்சு மற்றும்
கருத்து சுதந்திரத்திற்கு குடிமக்களுக்கு உரிமை உண்டு என்பதை
வலியுறுத்தி, சுவரொட்டிகள் மற்றும் வெளியீடுகள் குறித்த
முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டாம் என்று டெல்லி காவல்துறைக்கு
உத்தரவிட வேண்டும் மற்றும் டெல்லி காவல்துறையினர் பதிவு
செய்த முதல் தகவல் அறிக்கையை அனைத்தையும் ரத்து செய்ய கோரியுள்ளார்.

Related posts