குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவாகவும், விடுதலையாவது அதிகரித்து கொண்டிருக்கிறது: மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை
மதுரை: குற்றவியல் வழக்கு விசாரணையின் தரம் குறைகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவாகவும், விடுதலையாவது அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஒரு கொலை வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலமுருகன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி கூறுகையில், எந்த குற்ற வழக்கின் விசாரணையாக இருப்பினும் ஒரு தலைபட்சமாக விசாரணை நடைபெறக்கூடாது. விசாரணை நியாயமாகவும், பாரபட்சம் இல்லாமல் நடக்க வேண்டும். நியாயமான விசாரணை என்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் உரிமையாகும். உண்மையை வெளிக்கொண்டு வருவது தான் விசாரணையின் நோக்கம் ஆகும்.
தமிழக காவல்துறைக்கு உலக அரங்கில் சிறப்பான நற்பெயர் இருக்கிறது. அதற்கு பங்கம் வர அனுமதிக்கக்கூடாது. தமிழ்நாட்டில் குற்றவியல் வழக்குகளில் விசாரணை தரம் வெகுவாக குறைந்து வருகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குன்றியும், விடுதலையாவது அதிகரித்துக்கொண்டும் வருகிறது.இந்தச்செயல் தொடருமேயானால், பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கை இழக்க கூடும். குற்ற வழக்குகளை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள், புலன் விசாரணை செய்யக்கூடிய அளவிற்கு போதிய நிபுணத்துவம் பெற்றுள்ளனரா என்று கேள்வி எழுப்பியதுடன், இது பற்றி உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்கள்.
Reduction of convictions and increase in release: Madras High Court Madurai Branch
இதையும் படியுங்கள்
- மின்னணு ஊடகங்களுக்கு எதிரான குறைகளை செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் முன் எழுப்பலாம்: மும்பை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
- சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வீட்டில் 40 பவுன் தங்க, வைர நகைகள் கொள்ளை
- வக்கீலை துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த எஸ்.ஐ.: மாநில மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
- ஆகமக் கோயில்கள் வரைவுப் பட்டியல்: ஆட்சேபனை தெரிவிக்க மூன்று வார அவகாசம் – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- அரிசி ஆலைக் காற்று மாசு: சுடுகாட்டில் அமர்ந்து போராட மயிலாடுதுறை சித்தர்காடு கிராமத்தினருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- உறவு முறிந்ததால் மட்டும் பாலியல் வன்கொடுமை வழக்கு ஆகாது: வயது வந்தோரின் தேர்வுகளில் தார்மீகத் தீர்ப்பு கூடாது – உச்ச நீதிமன்றம்
- இறைச்சிக் கூடங்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே விதிமுறை: காயல்பட்டினம் நகராட்சி வழக்கில் பசுமைத் தீர்ப்பாய உத்தரவை உறுதி செய்த உயர் நீதிமன்றம்
← முந்தைய செய்தி: வக்கீலை துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த எஸ்.ஐ.: மாநில மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அடுத்த செய்தி →: மின்னணு ஊடகங்களுக்கு எதிரான குறைகளை செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் முன் எழுப்பலாம்: மும்பை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

