தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார்கள்: சென்னை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர்கள் இருவரும் இடமாற்றம் | Reshuffle in the police in Tamil Nadu, 12 IPS officers have been transferred to another department

தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார்கள்: சென்னை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர்கள் இருவரும் இடமாற்றம்

தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் 12 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்

தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் 12 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார், சென்னை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர்கள் இருவரும் மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் 12 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார், சென்னை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர்கள் இருவரும் மாற்றப்பட்டுள்ளனர்.

உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவு

தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர் நேற்று முன் தினம் இடமாற்றம் செய்யப்பட்டனர். இன்று மீண்டும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இதில் குறிப்பாக, நேற்று முன் தினம் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமாருக்கும் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ளார்.

தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம் விவரம்

 1. தேவகோட்டை சப்-டிவிஷன் ஏ.எஸ்.பி கிருஷ்ணராஜ் எஸ்.பி.யாகப் பதவி உயர்த்தப்பட்டு, சென்னை போக்குவரத்து காவல் (வடக்கு) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
 2. சென்னை போக்குவரத்து காவல் (வடக்கு) துணை ஆணையர் ராஜசேகரன், சென்னை காவல் ஆணையரக தலைமையிடத் துணை ஆணையராக இட மாற்றப்பட்டுள்ளார்.
 3. சென்னை காவல் ஆணையரகத் தலைமையிட துணை ஆணையர் விமலா, சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப்பிரிவு-1 துணை ஆணையராக இட மாற்றப்பட்டுள்ளார்.
 4. 4 .சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப்பிரிவு-1 துணை ஆணையர் திருநாவுக்கரசு, டி.ஜி.பி அலுவலக சட்டம் ஒழுங்கு ஏ.ஐ.ஜியாக இட மாற்றப்பட்டுள்ளார்.
 • டி.ஜி.பி அலுவலக சட்டம் ஒழுங்கு ஏஐஜி சாம்சன், உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
 • உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையர் சுந்தரவடிவேல், திருப்பூர் காவல் ஆணையரக தலைமையிடத் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
 • டி.ஜி.பி அலுவலக உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு ஏ.ஐ.ஜி ஸ்ரீதர்பாபு, சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப்பிரிவு-1 துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
 • சென்னை காவல் ஆணையரக நுண்ணறிவுப்பிரிவு-1 துணை ஆணையர் சுதாகர், டி.ஜி.பி அலுவலக உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்புப் பிரிவு ஏ.ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
 • காத்திருப்போர் பட்டியலில் இருந்த வருண்குமார், தானியங்கி மற்றும் கணினிமயமாக்கல் பிரிவு, சென்னை, எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
 • தானியங்கி மற்றும் கணினிமயமாக்கல் பிரிவு. சென்னை, எஸ்.பி. முத்தரசி, சி.பி.சி.ஐ.டி-2 எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
 • செப்.3 அன்று சென்னை ரயில்வே எஸ்.பி.யாக மாற்றப்பட்ட வேலூர் எஸ்.பி. பிரவேஷ் குமார் மாற்றம் உத்தரவு திருத்தப்பட்டு தருமபுரி எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
 • தருமபுரி எஸ்.பி. ராஜன், சென்னை ரயில்வே எஸ்.பி.யாக இட மாற்றப்பட்டுள்ளார்.
 • இவ்வாறு அந்த அரசு ஆணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  Reshuffle in the police in Tamil Nadu, 12 IPS officers have been transferred to another department

  Related posts