பத்தாம் வகுப்பு மாநில வாரிய தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்க உத்தரவு-தெலுங்கானா உயர்நீதிமன்றம்

ஹைதராபாத்:தெலுங்கானா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாநில வாரிய தேர்வு மார்ச் 31 முதல் ஏப்ரல் 6 வரை நடத்த திட்டமிடப்பட்டது.ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் பத்தாம் வகுப்பு மாநில வாரிய தேர்வுகளை ஒத்திவைக்க கோரி தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் கோவிட் -19 தொற்றுநோய் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்ட போதிலும் மாநில வாரிய தேர்வுகளை ஒத்திவைக்கவில்லை.மாநில அதிகாரிகள்,சுகாதார மற்றும் கல்வித் துறைகள் அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் மாணவர்களின் உரிமைகளை மீறுகின்றன என்று தெரிவித்தார்.இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ராமச்சந்திர ராவ் மற்றும் நீதிபதி கே லட்சுமன் ஆகியோர் அடங்கிய பிரிவு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் கோவிட் -19 தொற்றுநோய் வரவிருக்கும் அச்சுறுத்தல் குறையும் வரை மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளை காலவரையின்றி ஒத்திவைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related posts