செவிலியர் பணிக்கு தகுதி மதிப்பெண்ணை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களை நியமிக்க தடை-சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கடந்த ஜூலை 23 ஆம் தேதி செவிலியர் பணிக்கு தேர்வு நடைபெற்றது.ஆனால் தற்காலிக தேர்வு என்ற பெயரில் தகுதி மதிப்பெண்ணை விட குறைந்த மதிப்பெண் பெற்ற 56 பேரை தற்காலிகமாக தேர்வு செய்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அறிவிப்பாணை வெளியிட்டதை தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த செவிலியர் பட்டதாரி திவ்யபாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைக்கு தடை விதித்து ,மேலும் தகுதி மதிப்பெண்களுக்கு குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தடை விதித்து உத்தரவிட்டார்.அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் மருத்துவ பணிகள் வாரியம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.

Related posts