பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை வரவேற்க பதாகைகளை அமைக்க அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நகராட்சி நிர்வாக ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அக்டோபர் மாதம் 11-13 ஆம் தேதி மாமல்லபுரத்தில் மோடி மற்றும் ஜி ஜின்பிங் சந்திக்க உள்ளனர்.அவர்களை வரவேற்க பதாகைகளை அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. பதாகைகளை அமைக்க அனுமதி வழங்க கோரி மனுதாக்கல் செய்தனர்.அந்த மனு நீதிபதிகள் எம் சத்தியநாராயணன் மற்றும் என் சேஷசாயி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் பதாகைகளை அமைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். பதாகைகளை அமைக்க இருக்கும் விதிகளை அரசு பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.

Related posts