லஞ்சம் ஆட்சி செய்யும் சென்னை மாநகராட்சி: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கவலை.

No execution of basic work without bribe in Chennai municipality: Condemn by Chennai High court

சென்னை : சென்னையிலுள்ள ஷெனாய் நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் ஆக்ரமிக்கப்பட்டதாக திருமதி லட்சுமி என்பவர் தொடுத்த வழக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இவ்விசாரணைக்கு சென்னை மாநகராட்சியின் ஆணையர் திரு.கார்த்திகேயன் நேரில் ஆஜரானார். சென்னை மாநகராட்சி சார்பாக ஆஜரான வழக்கறிஞர், சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைகள் பற்றி

உயர்நீதி மன்றத்தில் பட்டியலிட்டார்.

அப்போது கூறிய நீதிபதி, சென்னை மாநகராட்சியில் லஞ்சம் அளிக்காமல் எந்த ஒரு சான்றிதழையும் பெற இயலாத நிலை உள்ளது என கூறினார்.

மேலும், சட்டவிரோத ஆக்ரமிப்புக்களை தடுக்க சென்னை மாநகராட்சியிடம் எந்த நடவடிக்கையும் ஏடுக்கவில்லை. ஆக்ரமிப்புகளைத் தடுக்க கடும் நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும்.

சென்னை மாநகராட்சியிலிருக்கும் ஊழல் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?. சென்னை மாநகராட்சியின் ஊழல் கண்காணிப்புக் குழுவின் வேலை என்ன?

மாநகராட்சிக்குள் மற்றும் மாநகராட்சிப் பகுதிக்கு உள்ளும் இலஞ்சத்தை ஒழிக்க எவ்விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சியில் சொத்து வரி நிலுவையை வசூலிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் என்னென்ன ? என அடுக்கடுக்கான கேள்விகளை வினவினார்.

மக்களுக்கான பணிகளை செய்ய இலஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் என்ன ஏடுக்கப்பட்டுள்ளது ?. ஊழல் தொடர்பான புகார்கள் பற்றி இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னென்ன? சென்னை மாநகராட்சி எல்லைபகுதிக்குள் விதிகளுக்குட்பட்டு கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?. மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக வழக்குகள் ஏதேனும் பதிவு செய்யப்பட்டுள்ளன?. என்பது போன்ற தொடர் கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.

மாநகராட்சி அதிகாரிகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என கூறிய நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related posts