இளைஞனின் வாயிலிருந்து 232 பற்கள் நீக்கம்

232 Teeth were removed from young man

232 Teeth were removed from young man
இளைஞனின் வாயிலிருந்து 232 பற்கள் நீக்கம்
பொதுவாக, பெரியவர்கள் என்றால் 32 பற்களும், குழந்தைகள் என்றால் 24 பற்களும் இருக்கும் என்பது இயற்கை நியதி. ஆனால், ஒரு இளைஞனின் வாயில் இருந்து, இதற்கு மாறாக, 232 பற்களை, டாக்டர்கள் நீக்கியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின், புல்தானா மாவட்டத்தில் வசிப்பவர், ஆஷிக் கவாய், வயது 17. மும்பையில் உள்ள, ஜே.ஜே., மருத்துவமனைக்கு முகம் முழுவதும் வீங்கிய நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு முன் வந்தார் ஆஷிக். டாக்டர்கள், ஆஷிக்கை பரிசோதித்த பின்னர், அவரை பல் டாக்டரிடம் அனுப்பினர். அங்கு பல் டாக்டர், ஆஷிக்கை பரிசோதித்து அளவுக்கும் அதிகமாக கடைவாய் பல் பெரியதாக உள்ளதால், முகம் வீங்கியுள்ளது. எனவே, அந்தப் பல்லை அகற்ற அறுவை சிகிச்சை செய்திட வேண்டும் என்றும் கூறினார்.
அதன்பிறகு, டாக்டர்கள் குழு, ஆஷிக்கின் பல்லை அகற்ற, அறுவை சிகிச்சையை தொடங்கினர். வரிசையாக, பற்கள் ஒன்றன் பின், ஒன்றாக, வந்து கொண்டே இருந்தன. அவை அனைத்தையும் அகற்றிய பின்னர் அவற்றை எண்ணிய டாக்டர்கள், அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், ஆஷிக்கின் வாயில் 232 பற்கள் அகற்றப்பட்டு உள்ளன.
ஒவ்வொன்றும், 3.5 மடங்கு கடைவாய் பலின் அளவை விட, அதிகமாக, சலவைக் கல்லைப் போன்று இரண்டு செ.மீ. அளவில் இருந்தன. இவைமற்றும் அல்லாமல், கடைவாய்ப் பல் போன்றுள்ள ஒரு கல்லும் அகற்றியுள்ளனர். டாக்டர்கள், “இத்தகைய, அரிய அறுவை சிகிச்சை, எங்களுக்கு முதல் முறை. மேலும் இந்த மாரத்தான் போன்ற அறுவை சிகிச்சை, ஏழு மணி நேரம் நடந்ததாது”, என்று கூறியுள்ளனர்.
ஆஷிக்கின் முகம், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சாதாரண நிலைக்கு மாறியது.

232 Teeth were removed from young man
Normally, there will be 32 teeth in elder persons and 24 teeth in Children. But from a young man named Ashiq Kawai, age 17, living in Pulthana District in Maharashtra State, doctors removed 232 teeth. 10 days before Ashiq goes to J. J. Hospital with swollen face. Doctors inspected him and send him to the Dentists. After checking him, doctors said that teeth has grown abnormally and it have to be operated immediately. After they undergone the operation, doctors were shocked to know that 232 teeths were removed from him. Some teeth were 3.5 times bigger than the usual teeth (i.e. 2 cm). Also a stone looks similar to teeth was removed. Doctors said, “Operation like this are very rare and it took about 7 hours to complete the operation”.

ADVERTISEMENT: To purchase Approved plots in and around Chennai, CLICK HERE

Related posts