child dies after drinking soft drink near neyveli நெய்வேலி அருகே குளிர்பானம் குடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மூன்றுபேர் கவலைக்கிடமான வகையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, குளிர்பானம் குடித்த 9 வயது சிறுமி ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 3 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெய்வேலியை அடுத்த தெற்கு சேப்பளநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சாபுலி என்பவர், தனது குழந்தைகளுக்கு அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் பிரபல நிறுவனத்தின் தயாரிப்பிலான குளிர்பானத்தை வாங்கி கொடுத்துள்ளார். அதனை குடித்த அவரது நான்கு குழந்தைகளும் சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தைகளை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு…
Read More நெய்வேலி அருகே குளிர்பானம் அருந்திய 9 வயது சிருமி மரணம்Category: செய்தி சிறகுகள்
சீனாவில் அதிகம் சாப்பிட்டு மதுவும் அருந்திய பெண் ஒருவரின் வயிறு வெடித்த வினோதம்
Woman’s stomach explodes after eating too much சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்துக்கொண்ட பெண் ஒருவர் அதிகம் சாப்பிட்டு, மதுவும் அருந்தியதால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது அவருடைய வயிறு வெடித்தது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சீனத் தலைநகரான பீஜிங்கில் நடந்த வினோத சம்பவம் ஒன்றில் மது அருந்தியபின், அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்த போது அவரது வயிறு வெடித்தது. 58 வயதான அப்பெண் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதில் அவரின் கீழ்வயிற்றில் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், அதற்காக ஒரு மின்சார கத்தியை பயன்படுத்தினர் (electric surgical knife). அப்போது இக்கத்தி, அப்பெண்ணின் வயிற்றில் இருந்த எத்தில் அல்கஹால் மீது பட்டபோது வயிறு வெடித்து வாயு வெளியாகி தீ பிழம்பு தோன்றியதாக கூறப்படுகிறது. இதனால்…
Read More சீனாவில் அதிகம் சாப்பிட்டு மதுவும் அருந்திய பெண் ஒருவரின் வயிறு வெடித்த வினோதம்அமெரிக்க சில்லறை வணிக நிறுவனத்தில் சிகரெட், புகையிலை விற்பதில்லை என முடிவெடுத்து உள்ளனர்
CVS Vows to Quit Selling Tobacco Products அமெரிக்காவின் பார்மஸி சில்லரை வணிக நிறுவனமான சிவிஎஸ் கேர்மார்க், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதில்லை என முடிவு செய்துள்ளது. அக்டோபர் 1 ம் தேதி முதல், சிவிஎஸ் பார்மஸியின் 7600 கடைகளிலும் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. 800 கடைகளில் மினி க்ளினிக்களும் செயல்பட்டு வருகின்றன. புகையிலை மற்றும் சிகரெட் பொருட்களை விற்பதை தடை செய்வதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் உடல் நலத்தில் நாங்கள் முழுமையாக அக்கறை செலுத்தமுடியும். நோய்க்கு காரணமாக இருக்கும் சிகரெட், புகையிலையை ஒரு கையிலும், அதை குணமாக்குவதற்காக மருந்து மாத்திரைகளை இன்னொரு கையிலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் கொடுப்பது, முரண்பாடான செயலாக இருக்கிறது. அதனால், இந்த முடிவு எடுத்தோம். ஆண்டுக்கும் 2 பில்லியன் டாலர்கள் வருமானம் குறையும் என்றாலும் நீண்டகால மக்கள் நலன் கருதி…
Read More அமெரிக்க சில்லறை வணிக நிறுவனத்தில் சிகரெட், புகையிலை விற்பதில்லை என முடிவெடுத்து உள்ளனர்ஆற்றலை அதிகரிப்பதற்காக அருந்தும் பானங்களை பயன்படுத்தும் இளைஞர்களை போதை பொருட்களுக்கு அடிமையாகும் ஆபத்து
Energy drinks behind substance use among teens ஆற்றலை அதிகரிப்பதற்காக இன்றைக்கு ஏராளமான பானங்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை வாங்கி குடிக்கும் பானங்கள் இளைஞர்களை எளிதில் போதை பொருட்களுக்கு அடிமையாகும் ஆபத்து அதிகம் உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலை கழகத்தின் சமூக ஆராய்ச்சி அமைப்பு ஆராய்ச்சியாளர் ஒய்வான் எம். டெர்ரி மெக்எல்ராத் தலைமையிலான ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆய்வு ஒன்று மேற்கொண்டனர். அதில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தெரியவந்தன. இளைய தலைமுறையினர், ஆற்றலை அதிகரிக்க குடித்துவிட்டு கடைசியில் ஆல்கஹாலுக்கு அடிமையாகி விடும் ஆபத்து அதிகம் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். இன்றைக்கு குட்டிப்பாப்பா முதல் இளைஞர்கள் வரை ஏதாவது ஒரு ஆற்றல் பானங்களை குடித்து வருகின்றனர். இந்த ஆற்றல் அளிக்கும் பானங்கள் பயன்பாடு அமெரிக்காவின் இளைஞர்களிடம் 3ல்…
Read More ஆற்றலை அதிகரிப்பதற்காக அருந்தும் பானங்களை பயன்படுத்தும் இளைஞர்களை போதை பொருட்களுக்கு அடிமையாகும் ஆபத்துஇந்திய கபடி வீராங்கனை ஜார்கண்டில் வேலை கேட்டு போராட்டம்
Kabaddi champ sits on dharna கடந்த 2012-ம் ஆண்டு நடந்த பெண்கள் உலகக்கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது. வெற்றிப்பெற்று இந்தியா திரும்பிய இந்திய அணி வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த அணியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை விந்தியாவாசினியும் இடம் பெற்றிருந்தார். பின்னர் தனது சொந்த மாநிலத்திற்கு வந்த விந்தியாவாசினிக்கு அப்போது முதல்வராக இருந்த அர்ஜூன் முண்டாவின் அரசு வேலை தருவதாக உறுதியளித்தது. ஆனால் அந்த ஆட்சி முடிவுபெற்றது. அதையடுத்து ஆட்சிக்கு வந்த ஹேமந்த் சோரனும் இரண்டு முறை வேலை கொடுப்பதாக விந்தியாவாசினிக்கு உறுதியளித்தார். ஆனால், அவர்களின் வாக்குறுதிக்கு ஏற்ப வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்த விந்தியாவாசினி ஏமாற்றம் அடைந்தார். நான்கு சகோதரிகளுடன் வாழ்ந்த அவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடி வருகிறது. இதையடுத்து இந்தியாவிற்கு பெருமை அந்த…
Read More இந்திய கபடி வீராங்கனை ஜார்கண்டில் வேலை கேட்டு போராட்டம்உயிரற்றவரின் கண் செல்கள் மூலம் பிறவியிலேயே பார்வையை இழந்தவர்களுக்கு கண் பார்வை
Eyes of the Dead Can Make the Living Blind See கண்ணில் ஏற்படும் குறைபாடுகளை ரெடினல் ஸ்டெம் செல்களைக் கொண்டும், இருதய கோளாறுகளை போக்க இருதய ஸ்டெம் செல்களைக் கொண்டும், அல்ஷிமர், பார்க்கின்சன் நோய் போன்றவற்றை குணப் படுத்த நரம்பு ஸ்டெம்செல்களும், தசை திசுக்களின் குறைபாடுகளை களைய மஸ்கோஸ்கெலிடல் ஸ்டெம் செல்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சிகிச்சை முறைகள் அனைத்தும் சோதனைகளின் பல்வேறு நிலை களைக் கடந்து வெற்றிகரமாக மனிதர்களில் சிகிச்சை யளித்து வரும் நிலையில் தற்போது இறந்தவரின் கண் செல்கள் மூலம் பார்வையற்றோர்க்கு பார்க்கும் திறனை வழங்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.அதிலும் பிறவியிலேயே பார்வையை இழந்தவர்களுக்கு உயிரற்றவரின் கண்களின் செல்கள் மூலம் முழுவதுமாக இல்லாவிட்டாலும் பொருட்களை அடையாளம் கண்டறியும் அளவுக்குத் திறனை வழங்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உயிரிழந்தோரின் கண்களின் பின் உள்ள…
Read More உயிரற்றவரின் கண் செல்கள் மூலம் பிறவியிலேயே பார்வையை இழந்தவர்களுக்கு கண் பார்வை19வது நூற்றாண்டு வரை இல்லாத – தற்பொழுது வளர்ந்து வரும் சக்கரை வியாதியையும், இனம்புரியாத பல்வேறு நோய்களையும் தவிர்ப்பது எப்படி
millets cooking classes and benefits சத்து உள்ள சிறுதன்யத்தை வைத்து சுவையான உணவு தயாரிப்பது எப்படி??. சென்னை மொகப்பேரில் சிறுதன்யத்தின் மகத்துவம் பற்றியும் அதனை வைத்து ஆரோக்கிய சமையல் செய்வது எப்படி எனவும் உரை நிகழ்த்த பட இருக்கிறது. உரை நிகழ்த்துபவர் அரிமா.செல்வராணி சரவணன். சிறுதன்யங்கள் : சாமை, திணை, வரகு, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, மற்றும் சோளம் மறந்துபோன நமது பாரம்பரிய உணவான சிறுதான்யத்தை வைத்து வகை வகையான சுவை மிகுந்த உணவு தயாரித்து நம்மிடையே 19வது நூற்றாண்டு வரை இல்லாத தற்பொழுது வளர்ந்து வரும் சக்கரை வியாதியையும், இனம்புரியாத பல்வேறு நோய்களையும் தவிர்ப்பது எப்படி என விளக்க உரை நடைபெற இருக்கிறது. நேரம் : காலை 11 முதல் மதியம் 12 வரை. தேதி : 7 பிப்ரவரி 2014 அணுகவேண்டிய முகவரி :…
Read More 19வது நூற்றாண்டு வரை இல்லாத – தற்பொழுது வளர்ந்து வரும் சக்கரை வியாதியையும், இனம்புரியாத பல்வேறு நோய்களையும் தவிர்ப்பது எப்படிஅமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகள்
This school teacher had a house full of 400 pythons, living and dead அமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரது வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைபாம்புகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலிபோர்னியா மாகாணத்தின் புறநகர்ப் பகுதியான சாண்டா ஆனாவில் வில்லியம் புச்மன் என்னும் ஆசிரியர் வசித்து வந்தார். இவருக்கு வயது 53. பாம்புகள் வளர்ப்பதில் அதீத ஆர்வமுடைய இவர், தனது வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகளை வளர்த்துவந்தார். இவற்றிற்கு உணவாக அவர் அடிக்கடி வீட்டிற்கு அதிக அளவில் எலிகளை கொண்டுவருவதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.இதனைத் தொடர்ந்து அவரது வீட்டை காவல்துறையினர் சோதனையிடச் சென்றனர். அப்போது, ஐந்து அறைகள் கொண்ட புச்மனின் வீட்டை பார்த்த காவல்துறையினர்…
Read More அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகள்டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உலகிலேயே உயரமான பெண்ணிற்கு வளர்ச்சியை கட்டுபடுத்த அறுவை சிகிச்சை
AIIMS frees tallest woman from curse உலகின் மிக உயரமான பெண்ணுக்கு வளர்ச்சியின் வேகத்தையும் அளவையும் கட்டுப்படுத்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரத்யேக சிகிச்சை மேற்கொள்ளபட்டது. 7.8 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான பெண்ணுக்கு, மிக உயரமாக இருப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பிறரை போல இல்லாமல் அளவில் மிக பெரிய கை, கால்களை கொண்டிருந்த இவர் சுமார் 15 வருடங்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தார். தற்போது 25 வயதாகும் கின்னஸ் சாதனையாளரான அப்பெண் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். இவருடைய நிலையை பார்த்து அவருக்கு உதவி புரிந்த ஆசிரியர் ஒருவர் அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்தார். பரிசோதனையின் போது அப்பெண்ணிற்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. அக்கட்டி அதீத வளர்ச்சி ஏற்படும்படி ஹார்மோன்களை வெளியேற்றியதாக தெரிந்தது. தற்போது அவரின் மூலையில் இருந்த கட்டியை அகற்றிய…
Read More டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உலகிலேயே உயரமான பெண்ணிற்கு வளர்ச்சியை கட்டுபடுத்த அறுவை சிகிச்சை3 1/2 கோடி ரூபாய் பணத்தை கிழித்து கழிவறையில் போட்ட ஜெர்மனியை சேர்ந்த 63 வயதுபெண்
Woman Tears up the Cash Into Pieces and Flushed it Down the Toilet ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் லாட்டரி டிக்கெட் மூலம் 3 1/2 கோடி ரூபாய் வரை வெற்றிபெற்றார். ஆனால், இவர் வெற்றிபெற்ற பணத்தை கிழித்து கழிவறையில் வீசியதாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் எஸ்ஸென் பகுதியைச் சேர்ந்த 63 வயது பெண்மணி ஏஞ்சலா மேயர். இவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 3 லட்சத்து 30 ஆயிரம் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் 3 1/2 கோடி) பரிசு விழுந்தது. ஆனால் இவர் குடிபோதையில் அந்த பணத்தை துண்டு துண்டாக கிழித்து கழிப்பறையில் போட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏஞசலாவின் கணவர் சில மாதங்களுக்கு முன் எஸ்ஸென் அருகிலுள்ள ஒரு பாராமரிப்பு இல்லத்தில் நோய் வாய்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.…
Read More 3 1/2 கோடி ரூபாய் பணத்தை கிழித்து கழிவறையில் போட்ட ஜெர்மனியை சேர்ந்த 63 வயதுபெண்