மும்பை: மகாராஷ்டிராவில் மாலேகான் நகரில் உள்ள ஒரு மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி நடைபெற்றது .வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் பெண் துறவி பிராக்யா சிங் தாகூர்,ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபத்யாய உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர்.
ஜாமினில் வெளிவந்த பிராக்யா சிங் தாகூர் நடந்துவரும் மக்களவை தேர்தலில் போபால் தொகுதியின் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.இன்று மும்பையில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி விநோத் பதால்கர் முன் விசாரணைக்கு வந்தது.குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் நேரில் ஆஜராவதை தவிர்த்து வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இனி குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரும் வாரம் ஒருமுறை கட்டாயம் நீதிமன்றத்தில அஜராக வேண்டும் என்று நீதிபதி விநோத் பதால்கர் உத்தரவிட்டார். பிறகு வழக்கு விசாரணையை மே 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படியுங்கள்
- பள்ளிப்பைகள், மதிய உணவுப்பைகள் வாங்க பள்ளி நிர்வாகம் வற்புறுத்தக்கூடாது- சென்னை உயர் நீதிமன்றம்
- கமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்
- மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
- குழந்தைகள் இணைய உரிமை: இணையத்தைப் பயன்படுத்துவது குழந்தைகள் உட்பட அனைவரின் அடிப்படை உரிமை; முழுத் தடை சரியல்ல என உச்ச நீதிமன்றம்
- கொடைக்கானல் ஆன்லைன் டிக்கெட்: பில்லர் ராக்ஸ், குணா குகை உள்ளிட்ட வனத்துறை சுற்றுலாத் தலங்களுக்கு முன்பதிவு கட்டாயம் அறிமுகம்
← முந்தைய செய்தி: மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு
அடுத்த செய்தி →: பள்ளிப்பைகள், மதிய உணவுப்பைகள் வாங்க பள்ளி நிர்வாகம் வற்புறுத்தக்கூடாது- சென்னை உயர் நீதிமன்றம்

