பத்திரிகையாளருக்கு எதிரான குற்றவியல் வழக்கை ரத்து செய்ய மேகாலயா உயர்நீதிமன்றம் மறுப்பு

பத்திரிகையாளருக்கு எதிரான குற்றவியல் வழக்கை ரத்து செய்ய மேகாலயா உயர்நீதிமன்றம் மறுப்பு File name: Meghalaya-High-Court.jpg

ஷில்லாங்: மேகாலயா உயர்நீதிமன்றம், செவ்வாயன்று, பத்திரிகையாளர் பாட்ரிசியா முகீம் மீது பதிவு செய்யப்பட்ட ஒரு குற்றவியல் வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. கூடைப்பந்தாட்ட மைதானத்தில் லாசோஹ்டூனில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாத இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலைக் குறிப்பிட்டு, பாட்ரிசியா தனது பேஸ்புக் பதிவில், “மேகாலயாவில் பழங்குடியினர் அல்லாதவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாகவும், 1979 முதல் தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் பிரச்சனையாளர்கள் கைது செய்யப்படவில்லை. இதன் விளைவாக மேகாலயா நீண்ட காலமாக தோல்வியுற்ற மாநிலமாக இருக்கிறது” என்ற பதிவுக்கு பின்னர், இதற்கு எதிராக புகார் கிடைத்ததும், காவல்துறை அவருக்கு எதிராக பிரிவு 153 ஏ / 500/505 சி ஐபிசி கீழ் ஒரு குற்றவியல் வழக்கை பதிவு செய்ததுடன், பிரிவு 41 ஏ சி.ஆர்.பி.சி.யின் கீழ் ஒரு நோட்டீஸையும் அனுப்பி அவர் விசாரணை அதிகாரி முன் ஆஜராகுமாறு காவல்துறை கோரியுள்ளது. இதனால், பிரிவு 482 சிஆர்பிசி கீழ் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

Related posts