மும்பை உயர்நீதிமன்றத்தின் பெயரை ‘மகாராஷ்டிரா உயர்நீதிமன்றம்’ என்று மாற்றுவதற்கான கோரிக்கையில் உச்சநீதிமன்றம் மத்திய அரசு பதிலை கோருகிறது

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் தமிழக அரசிடம் பதில் கோரியது

டெல்லி: மும்பை உயர்நீதிமன்றத்தின் பெயரை ‘மகாராஷ்டிரா உயர்நீதிமன்றம்’ என்று மாற்ற கோரி ஓய்வு பெற்ற தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி வி.பி. பாட்டீல் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். “மகாராஷ்டிரா” என்ற சொல் ஒரு மகாராஷ்டிரியன் வாழ்க்கையில் சிறப்பு முக்கியத்துவத்தை குறிக்கிறது என்றும், அதன் பயன்பாடு உயர்நீதிமன்றத்தின் பெயரில் வெளிப்பாட்டைக் காண வேண்டும். இந்திய அரசியலமைப்பின் 19, 21, 29 வது பிரிவுகளின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ள கலாச்சார மற்றும் பாரம்பரிய உரிமையின் வெளிப்பாடாகும் என்று பாட்டீல் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் எஸ்.ஏ. போபண்ணா மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Related posts