குடி போதையில் பிரசவம் பார்த்த ஆண் நர்ஸ்..

ஜெய்ப்பூர்: ஆண் நர்ஸ் குடி போதையில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததால் குழந்தை கொடூரமாக இறந்துவிட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்தை சேர்ந்த திலோக்பதி , அவரின் மனைவி தீக்ஷா கன்வர் நிறைமாத கர்ப்பிணி என்பதால் திலோக்பதி ராம்காரில் உள்ள அரசு சுகாதார மையத்தில் மனைவியை சேர்த்தார்.ஆனால் பணியில் டாக்டர் மற்றும பெண் நர்சுகளும் அங்கு இல்லாததால் கவலை அடைந்தார் . குடி போதையில் ஆண் நர்ஸ் அமிர்த்லால் மற்றும் உதவியாளரும் அங்கு இருந்தார். வலியால் பெண் துடிப்பதை பார்த்ததும் தானே பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். இந்த பிரசவத்தில் தலைக்கு பதிலாக இந்த குழந்தையின் கால் முதலில் வந்தது .பிரசவத்தின் போது குழந்தையின் உடல் மட்டும் வந்துவிட்டது , ஆனால் தலை கர்ப்ப பையிலேயே தங்கிவிட்டது. பிறகு மனைவியை ஜோத்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையின் தலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் .பிறகு ஆபரேஷன் மூலம் குழந்தையின் தலையை எடுத்தனர். பிறகு ராம்கார் ஆஸ்பத்திரியில் நடந்தது தெரியவந்தது. பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்ததுடன் பிரசவம் பார்த்த 2 பேர் மீதும் அஜாக்கிரதையாக சிகிச்சை அளித்து மரணத்தை ஏற்படுத்துதல், பாதுகாப்பாற்ற முறையில் ஆபத்தான சிகிச்சை அளித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

ஜெய்ப்பூர்: ஆண் நர்ஸ் குடி போதையில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததால் குழந்தை கொடூரமாக இறந்துவிட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்தை சேர்ந்த திலோக்பதி , அவரின் மனைவி தீக்ஷா கன்வர் நிறைமாத கர்ப்பிணி என்பதால் திலோக்பதி ராம்காரில் உள்ள அரசு சுகாதார மையத்தில் மனைவியை சேர்த்தார்.ஆனால் பணியில் டாக்டர் மற்றும பெண் நர்சுகளும் அங்கு இல்லாததால் கவலை அடைந்தார் .

குடி போதையில் ஆண் நர்ஸ் அமிர்த்லால் மற்றும் உதவியாளரும் அங்கு இருந்தார். வலியால் பெண் துடிப்பதை பார்த்ததும் தானே பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். இந்த பிரசவத்தில் தலைக்கு பதிலாக இந்த குழந்தையின் கால் முதலில் வந்தது .பிரசவத்தின் போது குழந்தையின் உடல் மட்டும் வந்துவிட்டது , ஆனால் தலை கர்ப்ப பையிலேயே தங்கிவிட்டது.

பிறகு மனைவியை ஜோத்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையின் தலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் .பிறகு ஆபரேஷன் மூலம் குழந்தையின் தலையை எடுத்தனர். பிறகு ராம்கார் ஆஸ்பத்திரியில் நடந்தது தெரியவந்தது.

பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்ததுடன் பிரசவம் பார்த்த 2 பேர் மீதும் அஜாக்கிரதையாக சிகிச்சை அளித்து மரணத்தை ஏற்படுத்துதல், பாதுகாப்பாற்ற முறையில் ஆபத்தான சிகிச்சை அளித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts