நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் ஜெசி ரைடர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். ஜெசி ரைடர் சில தினங்களுக்கு முன்பு நியூசிலாந்தின் பார் ஒன்றின் அருகில் மர்ம நபர்கள் சிலர் தாக்கியதில் தலை, நுரையீரல் பகுதியில் காயமடைந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். படுகாயமடைந்த இவர் மருத்துவமனையி அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு நினைவு திரும்பினார். இந்த நிலையில் நேற்று மருத்துவமனியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரது சொந்த ஊரான வெலிங்டனுக்கு விமானம் மூலம் சென்றார். கோமாவிலிருந்து மீண்ட நிலையில், சில நாட்கள் வீட்டில் தங்கி ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ள ரைடருக்கு மற்ற விடயங்கள் நினைவில் உள்ளபோதும், அவர் மீது நடந்த தாக்குதல் சம்பவம் மட்டும் நினைவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read MoreTag: கிரிக்கெட்
நான் கிரிக்கெட் கடவுளா' மனம் திறக்கிறார் சச்சின்
“”மற்றவர்களைப்போல நானும் சாதரண மனிதன் தான். கிரிக்கெட் கடவுள் அல்ல,” என, சச்சின் தெரிவித்தார். இந்திய அணியின் “மாஸ்டர்’ பேட்ஸ்மேன் சச்சின், 39. சர்வதேச அளவில் சதத்தில் சதம் அடித்து சாதித்தார். இவரை, இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் கடவுளாக பார்க்கின்றனர். இது குறித்து சச்சின் கூறியது:நான் கிரிக்கெட்டின் கடவுள் இல்லை. கடவுள் எப்போதும் தவறுகள் செய்யாதவர். போட்டிகளில் மற்ற வீரர்களைபோல நானும் தவறுகள் செய்கிறேன். இந்திய வீரர் கவாஸ்கரைப்போல் ஆக வேண்டும் என்பது எனது குழந்தை பருவ கனவு. பின் வளர்ந்துவரும் காலங்களில் நான் மிகவும் ரசித்தவர் ரிச்சர்ட்ஸ். அவரின் ஆட்டத்திற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. அதனால் கிரிக்கெட்டில் இவர்கள் இருவரும் கலந்த கலவையாக நான் உருவெடுக்க விரும்பினேன். எனது 100வது சதத்தை எட்டிய போது குதித்து ஆரவாரம் செய்யவேண்டும் என்ற எண்ணம் என் மனதில்…
Read Moreஐ.பி.எல். முதல் ஆட்டத்தில் கொல்கத்தா ரைடர்ஸ் வெற்றி
இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத் தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி தரப்பில், கேப்டன் காம்பீர் மற்று ம் எம்.கே. திவாரி இருவரும் அபார மாக பேட்டிங் செய்து அணிக்கு முன் னிலை பெற்றுத் தந்தனர். அவர்களுக்கு பக்கபலமாக, காலிஸ், யூசுப் பதான் மற்றும் மார்கன் ஆகியோர் ஆடினர். முன்னதாக பெளலிங்கின் போது, சுழ ற் பந்து வீரர் சுனில் நரீன் நன்கு பந்து வீசி டெல்லி அணியின் 4 முக்கிய விக் கெட்டைக் கைப்பற்றினார். அவருக்கு ஆதரவாக பிரட்லீ, பாட்டியா மற்றும் பாலாஜி ஆகியோர் பந்து வீசினர். இந்தியன் பிரீமியர் லீக்கின் டி – 20 போட்டி நேற்று துவங்கியது. கொல்க த்தாவில்…
Read More