சைக்கிள் கடைக்காரரின் மகள் லண்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிப்பதற்கான தகுதிதேர்வில் சாதனை

A cycle shop owner’s daughter from Nellai has excelled in English skill test and now going to London for higher studies.  சாதாரண, கிராமத்து சைக்கிள் கடைக்காரரின் மகள் லண்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது கிராமமே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கிறது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள காருகுறிச்சியை சேர்ந்தவர் முப்பிடாதி. அப்பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரது இரண்டாவது மகள் சுப்புலட்சுமி, நெல்லை ராணி அண்ணா அரசு கலைக்கல்லூரியில் எம்.காம். இரண்டாமாண்டு படிக்கிறார். தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் சார்பில், லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஒரு செமஸ்டர் முழுவதையும் இலவசமாகப் படித்து தேர்வு எழுதுவதற்கான சிறப்பு தகுதி தேர்வு நடந்தது. அரசு கல்லுரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் மட்டுமே இந்த…

Read More

ஏ.டி.எம்களில் பணம் எடுப்பதற்கு ஒவ்வொரு முறையும் கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவு

Now, Pay More For ATM Transactions   ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பிடித்தம் செய்யும் வங்கிகளின் பரிசீலனைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்து ரிசர்வ் வங்கிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார்.   தற்போது , வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,ல் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,ல் மாதத்திற்கு 5 முறை வரை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளவும், அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் முறை…

Read More

சார்ஜாவில் மீசை வைத்த இந்தியா என்ஜினீயரின் பாஸ்போர்ட் பறிமுதல்

Officer detains Indian man’s passport in Sharjah over dislike of moustache கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சுஜீல் குமார். கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் ஐக்கிய அரசு எமிரேட் நாடுகளில் ஒன்றான சார்ஜா சென்றிருந்தார். இவர் பயணம் செய்த விமானம் சார்ஜாவில் இறங்கியது. அங்கு அவரது பாஸ்போர்ட்டை அதிகாரி ஒருவர் பரிசோதித்து விட்டு அதன் மீது ‘ரப்பர் ஸ்டாம்ப்’ குத்தினார். ஆனால், அதை திருப்பி தராமல் அதில் இருந்த சுஜீல் குமாரின் போட்டோவை பார்த்து விட்டு சர்ச்சையில் ஈடுபட்டார். அதாவது நேரில் இவர் வைத்திருந்த மீசைக்கும், போட்டோவில் முகத்தில் இருந்த மீசைக்கும் வித்தியாசம் இருந்தது. எனவே, முகத்தில் இருக்கும் மீசையை அகற்றி விட்டு வந்து காட்டினால் தான் பாஸ்போர்ட்டை தரமுடியும் என ‘கெடுபிடி’ செய்தார். அதற்கு சுஜீல்குமார் விளக்கம் அளித்தார். ஆனால் இவர் சொன்னதை…

Read More

சத்திஸ்கரில் 10 வயது சிறுவனை துண்டுதுண்டாக வெட்டி படுகொலை

Child sacrifice suspected after missing boy’s body found சத்திஸ்கர் மாநிலத்தில் கண்டதுண்டமாக வெட்டப்பட்ட நிலையில் கிடைத்துள்ள 10 வயது சிறுவனின் பிரேதம் உள்ளூர் வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. சத்திஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டம் ரத்னபூர் பகுதியை சேர்ந்த ஹரிசங்கர் (10) என்ற சிறுவன் கடந்த சனிக்கிழமை காலை அப்பகுதியின் மலை மீது அமைந்துள்ள லக்கன் தேவி கோயிலுக்கு போவதாக தாயாரிடம் கூறிவிட்டு சென்றான். மாலை வெகுநேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் கலக்கம் அடைந்த தாய், ஊர் முழுவதும் தேடி பார்த்தார். அவனைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் உள்ளூர் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், கோயிலில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ரத்தக்கரை படிந்த ஹரிசங்கரின் உடைகள் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பிலாஸ்பூர் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட் தலைமையில் ஏராளமான…

Read More