கணக்கு வைத்திருப்பவரின் தவறு நிரூபிக்கப்படாவிட்டால் மோசடி ஆன்லைன் பரிவர்த்தனைக்கு வங்கி பொறுப்பு: தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்

கணக்கு வைத்திருப்பவரின் தவறு நிரூபிக்கப்படாவிட்டால் மோசடி ஆன்லைன் பரிவர்த்தனைக்கு வங்கி பொறுப்பு: தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் File name: Ncdrc.jpg

டெல்லி:தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் சமீபத்தில்,  ஒரு நபரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க வழிவகுக்கும் மோசடி பரிவர்த்தனைகள் நடந்தால் கணக்கு வைத்திருப்பவரின் தவறு காரணமாக மோசடி பரிவர்த்தனை நடந்தது என்பது நிரூபிக்கப்படவில்லை என்றால் இழப்புக்கு வாடிக்கையாளர் அல்ல சம்பந்தப்பட்ட வங்கி பொறுப்பாகும் .

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், கிரெடிட் கார்டு ஹேக் அல்லது போலியானது என்பதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று கருத்து தெரிவித்த தலைமை உறுப்பினர் சி. விஸ்வநாத் அவர்கள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். கணக்கு வைத்திருப்பவரின் தவறு காரணமாக தூண்டப்பட்ட மோசடி பரிவர்த்தனை நடந்துள்ளது என்பதை வங்கியால் நிரூபிக்க முடியாத நிலையில், எடுத்துக்காட்டாக கிரெடிட் கார்டு இழப்பு ஏற்பட்டால், அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு வங்கி பொறுப்பேற்க வேண்டும் என்று தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் கூறியது. பரிவர்த்தனைகள் நடந்த மின்னணு வங்கி அமைப்பில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகக் கருதப்பட்டது.

Related posts