Tamilnadu school reopens on 10th June 2013 கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 10) திறக்கப்படுகின்றன. கோடை வெப்பம் காரணமாக பள்ளிகள் ஜூன் 3-க்குப் பதில் ஜூன் 10-ம் தேதி திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 20-ம் தேதியோடு நிறைவடைந்தன. ஏப்ரல் 21 முதல் ஜூன் 3-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டது.ஜூன் முதல் வாரத்தில் கோடை வெப்பம் கடுமையாக இருந்ததால் பள்ளிகள் திறப்பது ஜூன் 10-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. ஒன்றரை மாத கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்களை ஒரே வாரத்தில் வழங்க உத்தரவிட்டுள்ளதால் புகைப்படம் எடுக்கும் பணியும் நாளையே தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி…
Read MoreCategory: கல்வி சிறகுகள்
சூரியனின் அடிப்பகுதியை ஆராய நாசா புதிய செயற்கைகோளை அனுப்ப முடிவு
new nasa satellite அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியனின் அடிப்பகுதி குறித்து விரிவான விவரங்களை பெற நவீன அறிவியல் செயற்கைக்கோள் ஒன்றை (ஐரிஸ்) இந்த மாதம் 26-ம் தேதி ஏவ முடிவு செய்துள்ளது. இதில் இயங்கும் ஐரிஸ் டெலஸ்கோப், சூரியனின் அடிப்பகுதியில் இருந்து வெளியேறும் புற ஊதாக்கதிர்கள் (அல்ட்ராவயலெட்) குறித்து ஆராய்ந்து மிக துல்லியமான புகைப்படங்களை அனுப்பி வைக்கும். இது குறித்த கண்காணிப்பில் ஈடுபடும் ஐரிஸ் குழுவானது, சூரியனில் உள்ள பொருட்கள் எவ்வாறு இயங்குகின்றன, அது எவ்வாறு சக்தியை பெறுகின்றது, மேலும் சூரியனின் சுற்றுப்புறத்தில் எவ்வாறு வெப்பம் வெளியேறி பரவி செல்கின்றது என்பது குறித்தும் கண்காணிக்கும். சூரியனின் மேற்பரப்பு மற்றும் சுற்றுப்புறம் ஆகியவற்றின் இடைப்பட்ட பகுதி இவற்றில் எங்கிருந்து புற ஊதாக்கதிர்கள் (அல்ட்ராவயலெட்) உருவாகின்றன என்றும் ஆராயும். இந்த புற ஊதாக்கதிர்கள் தான் பூமியின் காலநிலை மற்றும்…
Read Moreஎஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் : 9 மாணவிகள் முதலிடம்
sslc results exam 2013 தமிழகம் முழுவதும் 10.50 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கொங்கு வேளாளர் பள்ளி மாணவி அனுஷா 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல மேலும் 8 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 52 மாணவ மாணவிகள் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 496 மதிப்பெண்கள் பெற்று 137 மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். பிளஸ்-2 தேர்வு முடிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர்), அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் மாணவ-மாணவிகள் இலவசமாக தெரிந்துகொள்ள…
Read Moreகூகுல் புதிய சேவை: வயர்லெஸ் இணையம் அறிமுகமாகிறது
google new software: google fiber பல்வேறுபட்ட சேவைகளை வழங்கிவரும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், தற்போது அதிவேக தூர பரிமாற்றத்தினைக் கொண்ட வயர்லெஸ் இணைய இணைப்பினை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. முற்றிலும் தனது சொந்த சேவையாக அறிமுகப்படுத்தக் காத்திருக்கும் அந்நிறுவனம் Google Fiber எனும் இச்சேவை தொடர்பில் ஏற்கணவே அறிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது . இதன் மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றின் பின்தங்கிய கிராம மக்களும் இணைய சேவையினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே கூகுள் நிறுவனத்தின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். google new software: google fiber
Read Moreஅமெரிக்காவில் நடந்த புவியியல் போட்டியில் இந்திய வம்சாவழி மாணவர் முதலிடம்
Indian-American wins National Geographic Bee அமெரிக்காவில் உள்ள ‘நேசனல் ஜியோகிராபிக்’ என்ற அமைப்பு ‘நேசனல் ஜியோகிராபிக் பீ’ என்ற போட்டியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் கிட்டத்தட்ட 50 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். பல தகுதிச் சுற்றுகளைத் தாண்டி 54 பேர் இறுதி போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் முதல் இடத்தை இந்திய வம்சாவளி மாணவன் சாத்விக் கர்னிக் பெற்றார். இவர் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசித்து வருகிறார். மேலும் அங்குள்ள ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த போட்டிகளில் உலகின் பல பகுதிகளில் உள்ள புவியியல் அமைப்பு பற்றிய துளைத்தெடுக்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து இந்த வெற்றியைப் பெற்றார். இவருக்கு பரிசாக 25 ஆயிரம் அமெரிக்க டொலர்(ரூ.14 லட்சம்) கல்லூரி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர் ஈகுவடார்…
Read More1063 மதிப்பெண் வாங்கிய பிளஸ்டூ மாணவி தூக்கு போட்டு தற்கொலை
தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கியும் ஒரு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச் சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் அந்த மாணவி. நெல்லை மேலகரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். பேருந்து நடத்துனர். இவரது மனைவி பிரேம பாக்கியம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சிந்துஜா. 17 வயதான இவர் இலஞ்சியில் உள்ள பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ்டூ படித்திருந்தார். இந்த பள்ளிதான் நெல்லை மாவட்டத்திலேயே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. நன்கு படிக்கக்கூடியவர் சிந்துஜா. தேர்வில் அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்திருந்தார். டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். இந்த நிலையில் இன்று வந்த தேர்வு முடிவைப் பார்த்த அவர் 1063 மதிப்பெண்கள் வாங்கியிருந்தார். இதனால் பெரும்…
Read Moreஐ.ஏ.எஸ் தேர்வு 2012 கேரள பெண் ஹரிதா வீ குமார் முதலிடம்.
IAS topper harith v Kumar 2012 ஆம் ஆண்டின் சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கேரள பெண் ஹரிதா வீ குமார் முதலிடம். இதில் கடந்த முன்று ஆண்டுகளாக பெண்களே முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த 97 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 2012 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வில் இந்தியா முழுவதிலும் மொத்தம் 998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐ.ஏ.எஸ்(IAS) பணிகளுக்கு 180 பேரும், ஐ.எஃப்.எஸ்(IFS) பணிக்கு 30 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐ.பி.எஸ்(IPS) பணிக்கு 150 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த மார்ச்-ஏப்ரலில் நடந்த நேர்காணல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 2013 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸின் முதன்மைத் தேர்வு இந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. IAS topper harith v Kumar
Read Moreஇந்திய கணித மேதை சகுந்தலா தேவி மரணம்.
Indian mathematician shakuntala devi no more 22 April 2013: பெங்களூர்: மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் கணித மேதை சகுந்தலா தேவி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 80. கணித மேதை சகுந்தலா தேவிக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக அவர் கடந்த 2 வாரங்களாக பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.15 மணிக்கு இறந்ததாக சகுந்தலா தேவி கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் டிசி சிவதேவ் தெரிவித்தார். சுவாசப் பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளும் ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். சகுந்தலா தேவியின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ஆளுநர் பரத்வாஜ், முன்னாள் பிரதமர் தேவ கௌடா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். சகுந்தலா…
Read More