பாட்னா: செப்டம்பர் 20, 2018 பீகாரின் புர்னியே பகுதியில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த பள்ளி விடுதியில் போதைக்காக தொடர்ந்து இருமல் மருந்துகளை சாப்பிட்டு வந்த ஐந்து சிறுவர்களையும் விடுதி வார்டன் கண்டித்துள்ளார் . அதுமட்டுமில்லாமல் அவர்களை வேறு காப்பகத்திற்கு மாற்ற வார்டன் பிஜேந்திர குமார் முயற்சி செய்துள்ளார். இதை அறிந்த சிறுவர்களில் ஒருவன் வார்டனை கதவை திறக்கச் சொல்லி மிரட்டி உள்ளான்.கதவை திறக்க வார்டன் மறுத்ததால் அவரை சுட்டுவிட்டு நான்கு சிறுவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். ஒரு சிறுவனை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர், மற்ற நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.சிறுவர்களுக்கு துப்பாக்கி மற்றும் இருமல் மருந்து எங்கிருந்து கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.தப்பிச் சென்ற சிறுவர்களில் ஒருவன் மீது 12 க்கும் அதிகமான குற்ற வழக்குகள் உள்ளன என்றும் ,மற்றொரு சிறுவன் உள்ளூர் ஐக்கிய ஜனதா…
Read More சீர்திருத்த பள்ளி விடுதியில் போதைக்கு அடிமையாகி வார்டனை கொன்ற சிறுவர்கள்Category: செய்தி சிறகுகள்
விழுப்புரம் அருகே கார் ஓட்டுநரை வெட்டிவிட்டு கார் கொள்ளை
விழுப்புரம்: செப்டம்பர் 20, 2018 மதுரையை சேந்த கார் ஓட்டுநர் கிறிஸ்டோபர் டேனியல் தனது முதலாளியை சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பிவிட்டு மீண்டும் மதுரைக்கு செல்லும்போது தாம்பரத்தில் 4 பேர் கொண்ட கும்பல் விழுப்புரம் செல்ல வேண்டும் என்று கூறி காரில் எறியுள்ளனர்.கார் விராட்டுக்குப்பம் என்ற இடத்தில் சென்ற போது ஓட்டுநரை அரிவாளால் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு கார், செல்போன், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஆனது .தகவல் அறிந்த காவல் துறையினர் ஓட்டுநரை முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவமனையில்அனுமதித்து தாக்கி கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையும் படியுங்கள் சீர்திருத்த பள்ளி விடுதியில் போதைக்கு அடிமையாகி வார்டனை கொன்ற சிறுவர்கள் கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்த சச்சின்…
Read More விழுப்புரம் அருகே கார் ஓட்டுநரை வெட்டிவிட்டு கார் கொள்ளைஇன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதி .
சென்னை: செப்டம்பர் 15, 2018 இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதி . பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வுக்கு எண்ணெய் நிறுவனம் ஜூன் மாதம் 16-ஆம் தேதி முதல் தினந்தோறும் நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறையே காரணம்.நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் 49 காசுகள் என விற்பனை ஆனது. இன்று சென்னையில் ஒரு பெட்ரோல் விலை 36 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.84.85 ஆகவும், டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.77.74 ஆகவும் விற்பனை ஆகிறது . இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டுள்ளனர் . இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதையும் படியுங்கள் விழுப்புரம் அருகே கார் ஓட்டுநரை…
Read More இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதி .கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் சிபிஎஸ்இ தேர்வில் முதல் இடம் பெற்றதற்காக ஜனாதிபதி விருது பெற்றவர்
குருகிராம்:செப்டம்பர் 14, 2018 அரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரில் வசிப்பவர் 19 வயது மாணவி . நல்லா படிக்கக்கூடிய அந்த பெண் சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக ஜனாதிபதி விருது பெற்றவர். அந்த பெண் பயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் காரில் இருந்த 3 நபர்கள் கடத்தி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று இவர்களுடன் சிலரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது .பிறகு பெண் சுயநினைவை இழக்க அவரை பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து விட்டு சென்றுள்ளனர்.பலாத்காரம் செய்தவர்கள் அதே ஊரை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பல போலீஸ் நிலையங்களுக்குச் சென்றதாகவும் ஆனால் புகாரை வாங்க மறுத்த பிறகு காவல்துறை அலுவலரிடம் புகார் அளித்துள்ளதாக கூறி உள்ளார் என்று கூறப்படுகிறது. இதையும்…
Read More கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் சிபிஎஸ்இ தேர்வில் முதல் இடம் பெற்றதற்காக ஜனாதிபதி விருது பெற்றவர்புழல் சிறையில் டிவிக்கள் பறிமுதல்
சென்னை: 14th செப் 2018: சென்னையில் உள்ள புழல் சிறையில் இருக்கும் போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து சிறைத்துறை டி.ஐ.ஜி முருகேசன் புழல் சிறையில் இருக்கும் 24 உயர்மட்ட பாதுகாப்பு அறைகளில் திடீர் சோதனை நடத்தினார்என்றும் , அதில் முதல் வகுப்பு அறையில் 18 தொலைக்காட்சி பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், மேலும் 2 எப்எம்., வானொலிப்பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையும் படியுங்கள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் சிபிஎஸ்இ தேர்வில் முதல் இடம் பெற்றதற்காக ஜனாதிபதி விருது பெற்றவர் இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதி . ஆதார் தகவல்களை திருட சாஃப்ட்வேர் வெறும் ரூ.2,500 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்…
Read More புழல் சிறையில் டிவிக்கள் பறிமுதல்ஆதார் தகவல்களை திருட சாஃப்ட்வேர் வெறும் ரூ.2,500 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது – மறுக்கும் ஆணையம்
ஆதாரை ஹேக்கிங் செய்ய பயன்படும் சாஃப்ட்வேர் வெறும் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக சாஃப்ட்வேர் ஆய்வு செய்து ஆதார் விவரங்களின் பாதுகாப்பு உடைக்கப்படுவதை உறுதி செய்துள்ளதாக ஹஃபிங்டன்போஸ்ட் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ஆதார் விவரங்களை பொதுமக்களிடம் இருந்து பெறும் மையங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேரை இந்த பேட்ச் மூலம் திருடலாம். மேலும், எந்த ஆதார் மையம் இந்த சாப்ட்வேரை பயன்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ள பயன்படுத்தப்படும் ஜிபிஎஸ் சேவையையும் இந்த பேட்ச் மூலம் செயல் இழக்க செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த பேட்ச் மூலம், எந்த நாட்டில் உள்ளவர்களும், ஆதார் பாதுகாப்பை எளிதாக உடைக்க முடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திக்கு தனி நபர் அடையாள ஆணையம்(UIDAI) தன் ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளது. அதில், ஆதார் என்ரோல்மெண்ட்டை ஹேக் செய்ததாக கூறப்படும் செய்திகள்…
Read More ஆதார் தகவல்களை திருட சாஃப்ட்வேர் வெறும் ரூ.2,500 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது – மறுக்கும் ஆணையம்தான் ஒரு டாக்டர் என கூறி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார் போலி டாக்டர்!
கர்நாடக மாநிலம், பாகல்கோடு மாவட்டம், முத்ஹோல் என்ற பகுதியை சேர்ந்தவர் விகாஸ். இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கடாக் மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளில், 36 பிரேத பரிசோதனை செய்துள்ளார். விகாஸ், பி.எஸ்சி., நர்சிங் படித்தவர். ஆனால், டாக்டர் விகாஸ் பாட்டீல் என்பவரின் சான்றிதழில் தனது போட்டோவை ஒட்டி, தான் ஒரு டாக்டர் என கூறி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார். சமீபத்தில் தான் அவரை பற்றிய உண்மை தெரிய வந்தது. மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் அளித்த புகாரின் பேரில் போலீசார், விகாசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரிடம் விகாஸ் கூறுகையில்,’ என்னால் மற்ற டாக்டர்களை போல மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், நான் பி.எஸ்சி., நர்சிங் படித்து இருந்ததால் தாழ்வு மனப்பான்மை தோன்றியது. எனவே தான்…
Read More தான் ஒரு டாக்டர் என கூறி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார் போலி டாக்டர்!கணவர் விவாகரத்து கேட்டு வழக்கு!. தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் போலீஸ்!.
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவுதமன். இவருடைய மனைவி புவனேஸ்வரி. இவர் அப்பகுதி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.இதனையடுத்து கணவனை பிரிந்த புவனேஸ்வரி அவரது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் திடீரென நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் புவனேஸ்வரி.தகவலறிந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கவுதமன் விவாகரத்து கேட்டு சேலம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் புவனேஸ்வரி கணவருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டுள்ளார். தான் சேர்ந்து வாழ ஆசை உள்ளதாக புவனேஸ்வரி, கவுதமனை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து புவனேஸ்வரி எழுதி வைத்துள்ள கடிதத்தில், கணவருடன்…
Read More கணவர் விவாகரத்து கேட்டு வழக்கு!. தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் போலீஸ்!.Flood relief fund should not be distributed to Water Bodies Encroachers: Madras high Court
Flood relief fund should not be distributed to Water Bodies Encroachers. The Fund collected From Taxpayers’ must not go to wrongdoers : Madras HC நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு வரிசெலுத்துவோரின் நிதியை வெள்ள நிவாரண நிதியாக சலுகைகள் அளிப்பதை ரத்துசெய்ய உயர்நீதி மன்றம் பரிந்துரை “Citizen must feel free that even if there is large-scale rains, then the State is capable of dealing with such flood-related situations. However, the present situation is not providing any such guarantee or scope on account of large-scale encroachments in water bodies and water resources and other areas wherein the rain waters are…
Read More Flood relief fund should not be distributed to Water Bodies Encroachers: Madras high Courtதமிழ் நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் சென்னை மாணவிகள் மனு
Tamil nadu students file a case in Supreme Court against 69 percent reservation in the State புதுடெல்லி: தமிழ் நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய கோரி சென்னையை சார்ந்த இரண்டு மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். தமிழ் நாட்டில் கடந்த 1993ம் ஆண்டு சட்டசபையில் சிறப்பு சட்டம் இயற்றி ஜனாதிபதியின் ஒப்புதலோடு 69 சதவீத இடஒதுக்கீடு பெறப்பட்டது. இந்நிலையில், தமிழ் நாட்டில் மருத்துவ கலந்தாய்வில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றி வருவதால் ஓசி(OC) பிரிவை சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதால் அதனை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று சென்னையை சார்ந்த மாணவர்கள் தொடுத்த வழக்கை கடந்த 1ம் தேதி ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் 69…
Read More தமிழ் நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் சென்னை மாணவிகள் மனு