arrest warrant for Vijayakanth
திங்கள், 1 ஜூலை 2013: சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் அரசு அவதூறு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுக்கூட்டம் ஒன்றில் மக்கள் பணத்தை விளம்பரம் மூலம் அரசு விரயம் செய்கிறது என்று பேசியதாக தமிழக அரசு சார்பில் அவர் மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று விஜயகாந்த் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று விஜயகாந்த் மீது தொடரப்பட்ட மற்றொரு அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதற்காக நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டார். இதனால், சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராக முடியவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் இன்று சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். 29 ஆம் தேதிக்குள் அவர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணையை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
arrest warrant for Vijayakanth
இதையும் படியுங்கள்
- இந்தியா உள்பட 38 நாடுகளின் தூதரகத்தை அமெரிக்கா உளவு
- வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடி குண்டு மிரட்டல்
- வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் கொலை
- இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்தால் யாருக்கு சாதகம்? ஒரு நடுநிலைப் பார்வை
- சட்டமன்ற சிறப்புரிமை vs பேச்சுரிமை: 2003 தமிழக சட்டப்பேரவை வழக்கில் ஏழு நீதிபதிகள் அமர்வு
- வீரமணி போக்சோ வழக்கு: சிபிஐ விசாரணை மறுப்பு; திமுக–தவெக அரசியல் மோதல்
- ‘அதிமுக திமுகவின் கிளை’: தாராபுரத்தில் விஜய் தாக்கு; அக்டோபர் 6 இடைத்தேர்தல் முழு விவரம்
← முந்தைய செய்தி: வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் கொலை
அடுத்த செய்தி →: தொழில் துவங்க முன் வருவோர்களுக்கு ரூ.25 லட்சம் மானியம்
