மதுரை: 19 மார்ச் :
வேட்பாளர்கள், தாங்கள் போட்டியிடும் தொகுதிக்கு உட்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து பிரத்யேகமான தேர்தல் அறிக்கை வெளியிடவேண்டும் என தேர்தல் ஆணையம் எல்லா வேட்பாளர்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பதிலளிக்காத 9 அரசியல் கட்சிகளுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தொகை போர் விதவைகள் சங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசத்திற்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்ற போது, அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு பற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர்த்து பெரும்பாலான ஏனைய கட்சிகள் அனைத்தும் வாரிசு அரசியலையே ஊக்குவிப்பதாக தெரிவித்தார்கள். இந்தியாவை சுமார் 500 குடும்பங்கள் மட்டும் தான் ஆட்சி செய்கிறது. இங்கு நடப்பது மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா? என கேள்வி எழுப்பினர். அதன்பின், நோட்டீஸ்களுக்கு பதில் அளிக்காத அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் அபராதத்தை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்துவிட்டார்கள்.
இதையும் படியுங்கள்
- லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்: விஏஓவுக்கு 5 ஆண்டு சிறை
- டெண்டருக்கு லஞ்சம் வாங்கியதற்காக விமான நிலைய ஆணைய உயர் அதிகாரி கைது
- இரயில்வே நில ஆக்கிரமிப்புக்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?: உயர்நீதிமன்றம் கேள்வி
- தீபாவளி 2026: தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்கும் நேரம் என்ன? விதிகள், விடுமுறை, அரசு அறிவிப்பு நிலவரம்
- சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு எளிய விளக்கம்: பொது தீட்சிதர்கள், பிரிவு 26, 2014 தீர்ப்பு
- பொருளாதார நிபுணர் கலையரசன் விவகாரம்: FIR இல்லாமல் போலீஸ் அழைத்துச் செல்லலாமா? சட்டம் என்ன சொல்கிறது
- தமிழ்நாட்டில் நவம்பர் 4–8 மழை: IMD எச்சரிக்கை, தீபாவளி வார இறுதியில் பரவலான மழைக்கு வாய்ப்பு
← முந்தைய செய்தி: சென்னையில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக மோசடி
அடுத்த செய்தி →: லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்: விஏஓவுக்கு 5 ஆண்டு சிறை

