வக்கீலை துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த எஸ்.ஐ.: மாநில மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

நீதிமன்றத்தில் குற்றவாளியை  சரணடைய வைத்த விவகாரத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) ஒருவர், வக்கீலிடம் துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவதூறாகப் பேசியது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது பற்றி தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், நெல்லை எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீதிமன்றத்தில் குற்றவாளியை சரணடைய வைத்த விவகாரத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) ஒருவர், வக்கீலிடம் துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவதூறாகப் பேசியது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது பற்றி தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், நெல்லை எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாளையங்கோட்டையில் குலவணிகர்புரத்தைச் சார்ந்தவர் இசக்கி பாண்டியன். இவர் நெல்லை நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார். தன் கட்சிக்காரரான குற்றவழக்கில் சிக்கிய பேச்சிமுத்து என்பவருக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் வாங்க வழக்கறிஞர் இசக்கி பாண்டியன் முயற்சி செய்துள்ளார். எனினும், நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதனால் நெல்லை நீதிமன்றத்தில் பேச்சிமுத்து சரண் அடைவதற்கு வழக்கறிஞர் இசக்கி பாண்டியன் ஏற்பாடு செய்துள்ளார். இதை அறிந்த தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலைய…

Read More