காவல்துறையினர் தாக்கியதில் வாலிபர் சாவு – மக்கள் மறியல் : போக்குவரத்து பாதிப்பு

Tractor driver killed in police inquiry at Thiruthuraipoondi in a Police station  at Thiruvarur district of Tamil Nadu திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகில், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற இளம் வாலிபர், காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார். அதனால் காவல் துறையினரை கண்டித்து, 3000க்கு அதிகமான, பொதுமக்கள் ஒன்று கூடி சாலைமறியல் செய்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள கீரைக்கழூர் பஞ்சாயத்தில் இருக்கும் நங்காளி கிராமத்தை சேர்ந்த முருகையநின் மகன் சுந்தர், வயது 34. உழவு வாகன ஓட்டுனராக வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 4 மணிக்கு, ஆலிவலம் காவல்துறையினர் ஓர் வழக்கு விசாரணைக்காக, காவல் நிலையத்திற்கு சுந்தரை கூட்டிச் சென்றனர். அன்று இரவு சுந்தரை விசாரணையின் போது அடித்து, கொடூரமாக தாக்கி காவல்துறையினர் சித்ரவதை செய்ததாக…

Read More

திருச்சியில் 105 வயது மூதாட்டியை கொன்று 10 பவுன் நகை திருட்டு

105 year old women killed for 10 sovereign gold ornaments in Trichy திருச்சி அருகில் 105 வயதுடைய இலங்கை பூர்விகமாக கொண்ட மூதாட்டி ஒருவரை 10 பவுன் தங்க நகையை களவாட கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது. திருச்சியை அடுத்து உள்ள மாத்தூர் அண்ணா நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் திருமதி.பெரியநாயகி. இவருக்கு வயது 105. இவர் இலங்கையை சேர்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பே இவர் இந்தியாவில் குடியேறிவிட்டார். இவருடைய கணவவரும் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இவருக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உண்டு. இதில் 3 பிள்ளைகள் இலங்கையிலேயே இறந்துவிட்டனர். மற்ற அனைவரும் திருமணமாகி கோவையில் குடும்பத்துடன் இருக்கிறார்கள். மூதாட்டி பெரியநாயகி வீட்டில் தனியாக தான் இருந்து வந்தார். தனது மகன்கள் அனுப்பும் பணத்தை வைத்து தானாக சமையல்…

Read More