அமராவதி :அஸ்ராம் மருத்துவக் கல்லூரி பொது மருத்துவ உதவி பேராசிரியர் மற்றும் ஒரு சமூக ஆர்வலர்
அரசு பள்ளிகளை ஆங்கில ஊடகமாக மாற்ற வெளியிட்ட அரசு உத்தரவை ரத்து செய்ய கோரி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு தலைமை நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி மற்றும் நீதி நினால ஜெயசூர்யா ஆகியோர் அடங்கிய பிரிவு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த
நீதிபதிகள், பள்ளி கல்வியில் கற்பித்தல் ஊடகத்தை தேர்வு செய்வதற்கான விருப்பம் ஒரு அடிப்படை உரிமை என கூறி அரசு பள்ளிகளை ஆங்கில ஊடகமாக மாற்ற வெளியிட்ட அரசு உத்தரவை ரத்து செய்தனர்.