முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவலை ஜம்மு காஷ்மீர் அரசு ரத்து செய்கிறது

புதுடெல்லி: முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் பாரூக் அப்துல்லாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை ஜம்மு காஷ்மீர் அரசு வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.தேசிய மாநாட்டுத் தலைவர் ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்புச் சட்டத்தின்படி செப்டம்பர் 15, 2019 அன்று மூன்று மாதங்கள் காவலில் வைக்கப்பட்டார்.டிசம்பர் 13 ம் தேதி, தடுப்புக்காவல் உத்தரவு மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தின் முதன்மை செயலாளர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார் .அந்த உத்தரவில் முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் பாரூக் அப்துல்லாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை ரத்து செய்தது.

Related posts