தமிழ் நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் சென்னை மாணவிகள் மனு

Tamil nadu students file a case in Supreme Court against 69 percent reservation in the State

புதுடெல்லி: தமிழ் நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய கோரி சென்னையை சார்ந்த இரண்டு மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ் நாட்டில் கடந்த 1993ம் ஆண்டு சட்டசபையில் சிறப்பு சட்டம் இயற்றி ஜனாதிபதியின் ஒப்புதலோடு 69 சதவீத இடஒதுக்கீடு பெறப்பட்டது. இந்நிலையில், தமிழ் நாட்டில் மருத்துவ கலந்தாய்வில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றி வருவதால் ஓசி(OC) பிரிவை சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதால் அதனை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று சென்னையை சார்ந்த மாணவர்கள் தொடுத்த வழக்கை கடந்த 1ம் தேதி ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் 69 சதவீதம் சம்பந்தமாக சென்னையை சேர்ந்த இரண்டு மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளனர். அதில், தமிழ் நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டதால் இந்த ஆண்டு எங்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ படிப்பு கிடைக்காமல் ரத்தாகியுள்ளது. அதனால் இதனை முழுவதுமாக ரத்து செய்து வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் நடைபெறாமல் இருக்க நீதிமன்றம் தமிழ் நாட்டில் 69 சதவீதம் என்ற முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்கள்.

Related posts