நகைச்சுவை நடிகர் கருணாகரன் மீது போலீசில் புகார் கொடுத்த இயக்குனர்

நகைச்சுவை நடிகர் கருணாகரன் மீது போலீசில் புகார் கொடுத்த இயக்குனர் சென்னை: கடந்த பிப்ரவரி 7 ம் தேதி சீயோன் இயக்கிய 'பொதுநலன் கருதி' என்ற திரைப்படம் வெளியானது. 'பொதுநலன் கருதி' படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சிக்கு நடிகர் கருணாகரன் வரவில்லை என்று கூறப்படுகிறது . இது தொடர்பாக அவரது வருத்தத்தை இயக்குனர் சீயோன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார் . இதற்கு கருணாகரன் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்திற்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தாகக் கூறப்படுகிறது. இதனால் இயக்குனர் சீயோன் மற்றும் படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாகரன் மீது புகார் அளித்துள்ளனர். இந்த படத்தில் நடிக்க கருணாகரனுக்கு 25 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தும் நடிகர் கருணாகரன் வரவில்லை. செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சீயோன் , எங்களுக்கு கந்துவட்டிக்காரர்களால் படத்தை வெளியிடுவதில் பிரச்சனை வந்தது . இப்போது கருணாகரன் மிரட்டுகிறார் என்றார். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நடிகர் சங்க தலைவர் நாசர் ஆகியோரிடம் முறையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னை: கடந்த பிப்ரவரி 7 ம் தேதி சீயோன் இயக்கிய ‘பொதுநலன் கருதி’ என்ற திரைப்படம் வெளியானது. ‘பொதுநலன் கருதி’ படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சிக்கு நடிகர் கருணாகரன் வரவில்லை என்று கூறப்படுகிறது . இது தொடர்பாக அவரது வருத்தத்தை இயக்குனர் சீயோன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார் . இதற்கு கருணாகரன் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்திற்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தாகக் கூறப்படுகிறது. இதனால் இயக்குனர் சீயோன் மற்றும் படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாகரன் மீது புகார் அளித்துள்ளனர். இந்த படத்தில் நடிக்க கருணாகரனுக்கு 25 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தும் நடிகர் கருணாகரன் வரவில்லை. செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சீயோன் , எங்களுக்கு…

Read More

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் (மதுரை கிளை) உத்தரவிட்டும் வீடுகளை ஒதுக்கவில்லை: வருவாய்த் துறையினர் மீது புகார்

மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அரசு புறம்போக்கில் குடியிருந்தவர்களுக்கு குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்கீடு செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு 3 ஆண்டுகள் முடிந்தும், வருவாய்த் துறையினர் வீடுகளை இன்னும் ஒதுக்கவில்லை என புகார்கள் கூறப்படுகின்றன. சிவகாசி -வெம்பக்கோட்டை சாலையில் மயானப் புறம்போக்கில் பலர் வீடுகள் கட்டி, அதற்கு ராணி அண்ணா காலனி என பெயர் சூட்டி குடியிருந்து வந்தனர். கடந்த 2005 ஆம் ஆண்டில், நகராட்சி நிர்வாகம் அந்த இடத்தைக் காலி செய்யுமாறு இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்பின்னர், கட்டடங்களை இடித்து அங்கிருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அதையடுத்து, அண்ணா காலனி குடியிருப்புவாசிகள் மற்றும் சில கட்சியினர் சேர்ந்து, இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தனர். கடந்த 2015 மார்ச் 9 ஆம் தேதி, அண்ணா காலனி குடியிருப்புவாசிகளுக்கு…

Read More

சந்தியாவை நான் கொல்லவில்லை என்று கோர்ட்டில் கூறிய சைக்கோ பாலகிருஷ்ணன்!

சந்தியாவை நான் கொல்லவில்லை என்று கோர்ட்டில் கூறிய சைக்கோ பாலகிருஷ்ணன்! சென்னை: சந்தியாவை நான் கொல்லவில்லை என ஆலந்தூர் நீதிமன்றத்தில் அவரது கணவர் திடீர் என்று கூறியுள்ளார்.சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவருடைய மனைவி பெயர் சந்தியா. பாலகிருஷ்ணன் சினிமா துறையில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.சந்தியாவுக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருந்தது.ஆனால் இதை விரும்பாத பாலகிருஷ்ணன் கோபமடைந்துள்ளார். பின்னர் சந்தியாவிடம் நடிக்கும் ஆசையை விட்டு விடுமாறு கூறியும் அதற்கு மறுத்துள்ளார் . கடந்த 19-ஆம் தேதி சந்தியாவுக்கு வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் பாலகிருஷ்ணன். நம்பி சென்ற சந்தியாவிடம் நடிக்கும் எண்ணத்தை விட்டுவிடுமாறு கூறியும் மறுத்துள்ளார் . இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்ற சந்தியாவை தடுத்த பாலகிருஷ்ணன் சுத்தியலால் அடித்தது கொன்றதாக கூறப்படுகிறது .உயிரிழந்த சந்தியாவின் உடலை வெட்டி வீசியதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.பாலகிருஷ்ணன் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம், சந்தியாவை தான் கொல்லவில்லை என்று கூறியுள்ளார் . அவரை பிப்ரவரி 19-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சந்தியாவை நான் கொல்லவில்லை என ஆலந்தூர் நீதிமன்றத்தில் அவரது கணவர் திடீர் என்று கூறியுள்ளார்.சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவருடைய மனைவி பெயர் சந்தியா. பாலகிருஷ்ணன் சினிமா துறையில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.சந்தியாவுக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருந்தது.ஆனால் இதை விரும்பாத பாலகிருஷ்ணன் கோபமடைந்துள்ளார். பின்னர் சந்தியாவிடம் நடிக்கும் ஆசையை விட்டு விடுமாறு கூறியும் அதற்கு மறுத்துள்ளார் . கடந்த 19-ஆம் தேதி சந்தியாவுக்கு வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் பாலகிருஷ்ணன். நம்பி சென்ற சந்தியாவிடம் நடிக்கும் எண்ணத்தை விட்டுவிடுமாறு கூறியும் மறுத்துள்ளார் . இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்ற சந்தியாவை தடுத்த பாலகிருஷ்ணன் சுத்தியலால் அடித்தது கொன்றதாக கூறப்படுகிறது .உயிரிழந்த சந்தியாவின் உடலை வெட்டி வீசியதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.பாலகிருஷ்ணன் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.…

Read More

15 ஆண்களை கல்யாணம் செய்து நகை, பணம் மோசடி செய்த மகாலட்சுமி

15 ஆண்களை கல்யாணம் செய்து நகை, பணம் மோசடி செய்த மகாலட்சுமி மன்னார்குடி:15 ஆண்களை கல்யாணம் செய்து ஏமாற்றி நகை, பணத்தை எடுத்து சென்றுள்ளார் மகாலட்சுமி.மன்னார்குடியை சேர்ந்த உதயகுமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு ஏற்கனவே கல்யாணமாகி விவாகரத்து ஆனதால் 2-வது கல்யாணம் செய்து கொள்ள மேட்டர்மோனி மூலமாக ஒரு திருச்சியை சேர்ந்த பெண்ணை தேர்ந்தெடுத்தார். இவர்களுக்கு 2017-ம் வருடம் திருமணம் நடைபெற்றது. பிறகு வேலை சம்மந்தமாக உதயகுமார் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். ஒருநாள் மகாலட்சுமி நான் கர்ப்பமாக இருப்பதாக போனில் உதயகுமாரிடம் தெரிவித்தார். இதை அறிந்த உதயகுமார் சிங்கப்பூரில் இருந்து மன்னார்குடிக்கு வந்தார் .மகாலட்சுமிக்கு சந்தோஷப்படுத்த எதுவுமே சொல்லாமல் திடீரென வீட்டுக்கு வந்தார். ஆனால் அவருக்கு அங்கே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வீடு பூட்டியிருந்தது. அதனால் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரித்தபோது, வீட்டிலிருந்த எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டு கொண்டு மகாலட்சுமி எப்போவே போய் விட்டதாக சொன்னார்கள். செல்போன் ஸ்விட்ச் ஆப் என்பதால் அதிர்ச்சி அடைந்த உதயகுமார் மகாலட்சுமியை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என்பதால் காவல்துறையில் புகார் கொடுத்தார். இந்நிலையில் மகாலட்சுமியின் ஃபேஸ்புக் பார்த்தபோது ஏராளமான ஆண்களுடன் மகாலட்சுமிக்கு தொடர்பு இருந்தது என்பது தெரியவந்தது.பலரிடம் புகைப்படம் மற்றும் கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளதாக பதிவிட்டுள்ளார். மகாலட்சுமிக்கு ஏற்கனவே 15 பேருடன் கல்யாணம் ஆகியுள்ளது . 6 மாசத்துக்கு ஒரு கல்யாணம் மற்றும் கருவு கலைத்தும் உள்ளார். தன்னை போலவே 15 பேரை ஏமாற்றிய பெண்ணை கண்டுபிடித்து தருமாறும், அவரிடமிருந்து தனது பணம், நகைகளை மீட்டு தருமாறும் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் திருச்சியில் கருவை கலைத்துள்ளதற்கான ஆதாரத்தை காவல் நிலையத்தில் உதயகுமார் ஒப்படைத்தார்.

மன்னார்குடி:15 ஆண்களை கல்யாணம் செய்து ஏமாற்றி நகை, பணத்தை எடுத்து சென்றுள்ளார் மகாலட்சுமி.மன்னார்குடியை சேர்ந்த உதயகுமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு ஏற்கனவே கல்யாணமாகி விவாகரத்து ஆனதால் 2-வது கல்யாணம் செய்து கொள்ள மேட்டர்மோனி மூலமாக ஒரு திருச்சியை சேர்ந்த பெண்ணை தேர்ந்தெடுத்தார். இவர்களுக்கு 2017-ம் வருடம் திருமணம் நடைபெற்றது. பிறகு வேலை சம்மந்தமாக உதயகுமார் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். ஒருநாள் மகாலட்சுமி நான் கர்ப்பமாக இருப்பதாக போனில் உதயகுமாரிடம் தெரிவித்தார். இதை அறிந்த உதயகுமார் சிங்கப்பூரில் இருந்து மன்னார்குடிக்கு வந்தார் .மகாலட்சுமிக்கு சந்தோஷப்படுத்த எதுவுமே சொல்லாமல் திடீரென வீட்டுக்கு வந்தார். ஆனால் அவருக்கு அங்கே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வீடு பூட்டியிருந்தது. அதனால் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரித்தபோது, வீட்டிலிருந்த எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டு கொண்டு மகாலட்சுமி எப்போவே போய் விட்டதாக சொன்னார்கள். செல்போன் ஸ்விட்ச் ஆப் என்பதால்…

Read More

கும்மிடிப்பூண்டியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் அதனுடன் இணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றம்.

Gummidipoondi Combined court (Munsiff and Magistrate Courts) proposed to inaugurate on 6th Feb 2019. The Court building is in a Rented building in Rettambedu Road, Gummidipoondi.

கும்மிடிப்பூண்டியில் உள்ள ரெட்டம்பேடு சாலையில் இருக்கும் ஓர் வாடகைக் கட்டிடத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் அதனுடன் இணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் திறப்பு விழாவிற்காக காத்திருந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம், 6ம் தேதி, திறக்கப்படவிருப்பதாக கும்மிடிப்பூண்டி வட்டார வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. News in English: Gummidipoondi Combined court (Munsiff and Magistrate Courts) proposed to inaugurate on 6th Feb 2019. The Court building is in a Rented building in Rettambedu Road, Gummidipoondi.

Read More

தமிழக டிஜிபி :காவல்துறையினர் கைப்பேசி பயன்படுத்த கட்டுப்பாடு மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழக டிஜிபி :காவல்துறையினர் கைப்பேசி பயன்படுத்த கட்டுப்பாடு மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் பணியில் உள்ள தமிழக காவல்துறையினர் கட்டுப்பாட்டை மீறி கைப்பேசி பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்தாண்டு நவம்பர் மாதத்தின் போது டிஜிபி ராஜேந்திரன் சுற்றறிக்கை ஒன்றை வெளிட்டார். அதில் அனைத்து பிரிவில் உள்ள காவல்துறையினரும் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆறு காவலர்கள் கைப்பேசி பயன்படுத்தியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாதப்பட்டனர், மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்த பிறகு விடுவிக்கப்பட்டனர். டிஜிபி ராஜேந்திரன் நேற்று முன்தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரிவு காவல்துறைக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை வெளிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் பணியில் ஈடுபடும் காவலர்கள் கைப்பேசியை தங்கள் வசம் எடுத்து செல்லக்கூடாது ,அதை மீறினால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு போது, போராட்டத்தின் போது ,திருவிழாவின் போது , போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியின் போது ஈடுபடும் காவலர்கள் முற்றிலும் கைபேசியை தவிர்க்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தமிழ்நாடு:பணியில் உள்ள தமிழக காவல்துறையினர் கட்டுப்பாட்டை மீறி கைப்பேசி பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்தாண்டு நவம்பர் மாதத்தின் போது டிஜிபி ராஜேந்திரன் சுற்றறிக்கை ஒன்றை வெளிட்டார். அதில் அனைத்து பிரிவில் உள்ள காவல்துறையினரும் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆறு காவலர்கள் கைப்பேசி பயன்படுத்தியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாதப்பட்டனர், மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்த பிறகு விடுவிக்கப்பட்டனர். டிஜிபி ராஜேந்திரன் நேற்று முன்தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரிவு காவல்துறைக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை வெளிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் பணியில் ஈடுபடும் காவலர்கள் கைப்பேசியை தங்கள் வசம் எடுத்து செல்லக்கூடாது ,அதை…

Read More

கொடநாடு கொலைவழக்கில் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய மனுத்தாக்கல்

கொடநாடு கொலைவழக்கில் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய மனுத்தாக்கல் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சயான் மற்றும் மனோஜ் குற்றவாளிகளின் ஜாமினை ரத்து செய்ய உதகை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார் . அதே சமயத்தில் கொள்ளையும் நடைபெற்றது.இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இரண்டாம் குற்றவாளியான சயானின் மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் விபத்தில் உயிரிழந்தனர். சயான் மற்றும் உயிர்தப்பினார்.அவர் படுகாயத்துடன் சயான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கேரள மாநிலத்தை சேர்ந்த திபு, ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஷ் சமி, மனோஜ், உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ் ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டனர். மருத்துவமனையிலிருந்து வந்த சயானை போலீஸார் கைது செய்தனர். சயான் மற்றும் மனோஜ் பத்திரிகையாளர் சாமுவேலுடன் சேர்ந்து கொடநாடு விவாகரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்புள்ளதாக தெரிவித்ததை அடுத்து சயான் மற்றும் மனோஜ் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்ய கோரி அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் நந்தகுமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

கொடநாடு :கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சயான் மற்றும் மனோஜ் குற்றவாளிகளின் ஜாமினை ரத்து செய்ய உதகை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார் . அதே சமயத்தில் கொள்ளையும் நடைபெற்றது.இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இரண்டாம் குற்றவாளியான சயானின் மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் விபத்தில் உயிரிழந்தனர். சயான் மற்றும் உயிர்தப்பினார்.அவர் படுகாயத்துடன் சயான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கேரள மாநிலத்தை சேர்ந்த திபு, ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஷ் சமி, மனோஜ், உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ்…

Read More

கும்பகோணத்தில் ரவுடி சக்திவேல் வெட்டிக்கொலை!

கும்பகோணத்தில் ரவுடி சக்திவேல் வெட்டிக்கொலை! கும்பகோணம் : ராமகிருஷ்ணா நகர் மாதுளை பேட்டை தெருவில் வசிப்பவர் ரவுடி சக்திவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சங்கரின் மகன் சக்திவேல் வயது 25 அந்த பகுதியில் ரவுடி என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இவருக்கு மற்றவர்களுக்கும் மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது . நேற்று இரவு கும்பகோணம் உள்ள பத்தடி பகுதியிலிருந்து வந்த இருபதுக்கும் மேற்பட்டோர் சக்திவேலை சரமாரியாக வெட்டி உடலை அங்குள்ள பாதாள சாக்கடையில் போட்டு விட்டு அந்த கும்பல் ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த காவல் துறையினர் பாதாள சாக்கடையில் இருந்து சடலத்தை கைப்பற்றி இது சம்மந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணம் : ராமகிருஷ்ணா நகர் மாதுளை பேட்டை தெருவில் வசித்த ரவுடி சக்திவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சங்கரின் மகன் சக்திவேல் வயது 25 அந்த பகுதியில் ரவுடி என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இவருக்கு மற்றவர்களுக்கும் மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது . நேற்று இரவு கும்பகோணம் உள்ள பத்தடி பகுதியிலிருந்து வந்த இருபதுக்கும் மேற்பட்டோர் சக்திவேலை சரமாரியாக வெட்டி உடலை அங்குள்ள பாதாள சாக்கடையில் போட்டு விட்டு அந்த கும்பல் ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த காவல் துறையினர் பாதாள சாக்கடையில் இருந்து சடலத்தை கைப்பற்றி இது சம்மந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More

குடி போதையில் பிரசவம் பார்த்த ஆண் நர்ஸ்..

ஜெய்ப்பூர்: ஆண் நர்ஸ் குடி போதையில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததால் குழந்தை கொடூரமாக இறந்துவிட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்தை சேர்ந்த திலோக்பதி , அவரின் மனைவி தீக்ஷா கன்வர் நிறைமாத கர்ப்பிணி என்பதால் திலோக்பதி ராம்காரில் உள்ள அரசு சுகாதார மையத்தில் மனைவியை சேர்த்தார்.ஆனால் பணியில் டாக்டர் மற்றும பெண் நர்சுகளும் அங்கு இல்லாததால் கவலை அடைந்தார் . குடி போதையில் ஆண் நர்ஸ் அமிர்த்லால் மற்றும் உதவியாளரும் அங்கு இருந்தார். வலியால் பெண் துடிப்பதை பார்த்ததும் தானே பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். இந்த பிரசவத்தில் தலைக்கு பதிலாக இந்த குழந்தையின் கால் முதலில் வந்தது .பிரசவத்தின் போது குழந்தையின் உடல் மட்டும் வந்துவிட்டது , ஆனால் தலை கர்ப்ப பையிலேயே தங்கிவிட்டது. பிறகு மனைவியை ஜோத்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையின் தலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் .பிறகு ஆபரேஷன் மூலம் குழந்தையின் தலையை எடுத்தனர். பிறகு ராம்கார் ஆஸ்பத்திரியில் நடந்தது தெரியவந்தது. பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்ததுடன் பிரசவம் பார்த்த 2 பேர் மீதும் அஜாக்கிரதையாக சிகிச்சை அளித்து மரணத்தை ஏற்படுத்துதல், பாதுகாப்பாற்ற முறையில் ஆபத்தான சிகிச்சை அளித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

ஜெய்ப்பூர்: ஆண் நர்ஸ் குடி போதையில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததால் குழந்தை கொடூரமாக இறந்துவிட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்தை சேர்ந்த திலோக்பதி , அவரின் மனைவி தீக்ஷா கன்வர் நிறைமாத கர்ப்பிணி என்பதால் திலோக்பதி ராம்காரில் உள்ள அரசு சுகாதார மையத்தில் மனைவியை சேர்த்தார்.ஆனால் பணியில் டாக்டர் மற்றும பெண் நர்சுகளும் அங்கு இல்லாததால் கவலை அடைந்தார் . குடி போதையில் ஆண் நர்ஸ் அமிர்த்லால் மற்றும் உதவியாளரும் அங்கு இருந்தார். வலியால் பெண் துடிப்பதை பார்த்ததும் தானே பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். இந்த பிரசவத்தில் தலைக்கு பதிலாக இந்த குழந்தையின் கால் முதலில் வந்தது .பிரசவத்தின் போது குழந்தையின் உடல் மட்டும் வந்துவிட்டது , ஆனால் தலை கர்ப்ப பையிலேயே தங்கிவிட்டது. பிறகு மனைவியை ஜோத்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையின்…

Read More

பொறாமையால் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை

பொறாமையால் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை திருப்பூர்:பல்லடம் பகுதியைச் சேர்ந்த தம்பதி முத்துக்கிருஷ்ணன் - லாவண்யா. இருவருக்கும் ஒன்றரை வருடம் முன் கல்யாணம் ஆகியும் தம்பதிக்கு குழந்தை கிடையாது. லாவண்யா முத்துகிருஷ்ணனை விட கொஞ்சம் அதிகம் படித்தவர் என்பதால் பொறாமை பிரச்சனையை இருந்து வந்தது. முத்துக்கிருஷ்ணன் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் . இவர்களுக்குள் பொறாமை பிரச்சனையால் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. நேற்றுமுன்தினம் இரவு சண்டை நடந்துள்ளது. அக்கம்பக்கம் வீட்டில் உள்ளவர்கள் வழக்கம்போல் சண்டை என்று கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது . நேற்று காலையில் அவர்களது வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவலை அறிந்து போலீசாரும் விரைந்து வந்து கதவை உடைத்த போது இருவரும் ஒரே புடவையை கழுத்தில் சுற்றியபடி தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தனர்.இருவரின் உடல்களையும் மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . இது கொலையா இல்லை தற்கொலையா என்று இனிமேல் தான் தெரியவரும் என்று கூறப்படுகிறது .

திருப்பூர்:பல்லடம் பகுதியைச் சேர்ந்த தம்பதி முத்துக்கிருஷ்ணன் – லாவண்யா. இருவருக்கும் ஒன்றரை வருடம் முன் கல்யாணம் ஆகியும் தம்பதிக்கு குழந்தை கிடையாது. லாவண்யா முத்துகிருஷ்ணனை விட கொஞ்சம் அதிகம் படித்தவர் என்பதால் பொறாமை பிரச்சனையை இருந்து வந்தது. முத்துக்கிருஷ்ணன் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் . இவர்களுக்குள் பொறாமை பிரச்சனையால் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. நேற்றுமுன்தினம் இரவு சண்டை நடந்துள்ளது. அக்கம்பக்கம் வீட்டில் உள்ளவர்கள் வழக்கம்போல் சண்டை என்று கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது . நேற்று காலையில் அவர்களது வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவலை அறிந்து போலீசாரும் விரைந்து வந்து கதவை உடைத்த போது இருவரும் ஒரே புடவையை கழுத்தில் சுற்றியபடி தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தனர்.இருவரின் உடல்களையும் மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .…

Read More