இன்று எழுத்தாளர் கல்கியின் பிறந்தநாள்

வரலாற்றுப் புதினத்தின் தந்தை எனஅழைக்கப்பட்ட கல்கி அவர்களின் பிறந்தநாள் இன்று. தம் படைப்புகளால் சமகால சமூகநிலையைப் பிரதிபலித்ததோடு, வரலாற்றையும் திரும்பிப்பார்க்கவைத்தவர் கல்கி ஆவார். கல்கி (செப்டம்பர் 9, 1899 – டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. கல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில்…

Read More

தூக்கு கயிற்றில் நிஜம் : ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தீர்க்கப்படாத முடிச்சுக்கள்…: திருச்சி வேலுச்சாமியின் துணிவான எழுத்துக்கள்

Thooku kayittril Nijam Book written by Writer Trichy Veluswamy ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தீர்க்கப்படாத முடிச்சுக்கள்… எப்படி ஜோன் எப். கெனடி, சுவீடிஸ் பிரதமர் ஓலப்பால்மே, டயானா கொலை வழக்குகள் தீர்ந்து போகாத தகவல்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றனவோ அதுபோலவே ராஜிவ்காந்தி கொலையும் தீர்ந்து போகாத பக்கங்களாக, தீராநதியாக தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் திருச்சி வேலுச்சாமியால் எழுதப்பட்டு வெளியாகியுள்ள தூக்குக் கயிற்றில் நிஜமும் அருமையான ஓர் ஆவணமே. தொகுப்பாளர் ஏகலைவனும், நூலசிரியரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் நூலில் கவனத்தைத் தொட்ட சில விடயங்கள்… 01. ஸ்ரீ பெரும்புத்தூரில் குண்டு வெடித்து ராஜீவ் கொல்லப்படுவதற்கு சுமார் 25 நிமிடங்களுக்கு முன்னதாக சுப்பிரமணிய சுவாமிக்கு நூலின் ஆசிரியர் திருச்சி வேலுச்சாமி போன் செய்கிறார். அப்போது சுவாமி கேட்கிறார்.. ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் இறந்துவிட்டாரா என்று.. மின்னல்…

Read More