சென்னை 26 பிப்ரவரி 2019: சென்னை உயர் நீதிமன்றத்தில் பழங்குடி இனத்தை சார்ந்த குணநிதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 2008ம் ஆண்டில் சட்டப் படிப்பு முடித்து 2010ல் வக்கீல்களுக்கான தேசிய தகுதி தேர்விலும் தேர்ச்சி அடைந்தேன். தற்சமயம் திருச்சி சட்டக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். கடந்த 2014ல் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 50 விரிவுரையாளர்களுக்கன பணியிடங்கள் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. பழங்குடியினர் பிரிவுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடும் அறிவிக்கப்படிருந்தது. அதன் பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 186 உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பு ஆணையும் வெளியிடப்பட்டது. கடந்த மூன்று முறையும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
ஆகவே, பழங்குடியினருக்கான 1% இட ஒதுக்கீடு வழக்கப்படும் என்ற அறிவிப்பாணையின்படி சட்டப் பல்கலைகழக விரிவுரையாளர் பணி எனக்கு வழங்குமாறு உத்தரவிட பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கு மார்ச் 4ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது, அதுவரையில் சட்டப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவு பிறப்பித்தார்.
News Headline: Appointment of assistant professor post of Dr Ambedkar law college stayed by Madras high Court
இதையும் படியுங்கள்
- கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி உபயோகபடுத்த அறநிலையத்துறைக்கு தடை!
- 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 53 வயது நபர்!
- நீதிமன்றத்தில் போலீஸாருடன் நடந்த மோதல் வழக்கில் வழக்கறிஞர்கள் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை
- ஆகமக் கோயில்கள் வரைவுப் பட்டியல்: ஆட்சேபனை தெரிவிக்க மூன்று வார அவகாசம் – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- அரிசி ஆலைக் காற்று மாசு: சுடுகாட்டில் அமர்ந்து போராட மயிலாடுதுறை சித்தர்காடு கிராமத்தினருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
- உறவு முறிந்ததால் மட்டும் பாலியல் வன்கொடுமை வழக்கு ஆகாது: வயது வந்தோரின் தேர்வுகளில் தார்மீகத் தீர்ப்பு கூடாது – உச்ச நீதிமன்றம்
- இறைச்சிக் கூடங்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே விதிமுறை: காயல்பட்டினம் நகராட்சி வழக்கில் பசுமைத் தீர்ப்பாய உத்தரவை உறுதி செய்த உயர் நீதிமன்றம்
← முந்தைய செய்தி: நீதிமன்றத்தில் போலீஸாருடன் நடந்த மோதல் வழக்கில் வழக்கறிஞர்கள் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை
அடுத்த செய்தி →: கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி உபயோகபடுத்த அறநிலையத்துறைக்கு தடை!

