சென்னையில் பேருந்துகள் ஓடத் துவங்கியது

சென்னை: பேருந்துகளை இயக்குவதற்கு தமிழக அரசு அனுமதியளித்ததைத் தொடா்ந்து, இன்று காலை முதல் சென்னையில் பேருந்துகள் ஓடத் துவங்கின.

சென்னை: பேருந்துகளை இயக்குவதற்கு தமிழக அரசு அனுமதியளித்ததைத் தொடா்ந்து, இன்று காலை முதல் சென்னையில் பேருந்துகள் ஓடத் துவங்கின. கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை மாநகரப் பேருந்து சேவை சுமார் 160 நாள்களுக்குப் பின்னர் இன்று காலை ஓட துவங்கியது. முதல் நாள் என்பதால் கூட்ட நெரிசலை காண முடியவில்லை. சென்னையின் சில முக்கியப் பேருந்து நிலையங்களைப் பொறுத்தவரை இரயிலில் இருந்து வரும் பயணிகள் தங்களது பணியிடங்களுக்குச் செல்ல பேருந்துகளை நாடுவர். தற்போது இரயில் சேவை இயக்கப்படாததாலும், பல தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதாலும், முதல் நாளான இன்று பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்படவில்லை என்றும் கருதப்படுகிறது. தமிழகத்தில், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட 7 போக்குவரத்துக் கழகத்தின் கீழ் சுமாா் 19 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 மாதங்களுக்கு முன்…

Read More