சட்ட விரோத பேனர் வழக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் நேரில் ஆஜராக உத்தரவு: உயர்நீதிமன்றம் சென்னை: சட்ட விரோத பேனர்வைத்ததற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி மார்ச் 13ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு காஞ்சிபுரம் கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுடிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் அரசியல் கட்சியினர், சாதி சங்கத்தினர், சமூக அமைப்பினர் பேனர் வைக்கபதற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இத்தடை உத்தரவை மீறி சென்னை மற்றும் கோவை உள்பட பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த பேனர்கள் பெரும்பாலும் சாலைகளின் குறுக்கேயும், நடைபாதையை மறித்துக்கொண்டும் ஆக்கிரமித்தும் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசு அதிகாரிகளே அனுமதி வழங்கி உள்ளதாகவும் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி குற்றச்சாட்டுகளை கூறி வந்துள்ளார். இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கு மதிக்காமல் முரணாக செயல்படுவதாக தலைமை செயலாளர், உள்துறை செயலர்,…
Read MoreYou are here
- Home
- சட்ட விரோத பேனர் வழக்கு