ஆசிரியர் கொள்கை: தமிழ் சிறகுகள் வெளியிடும் செய்திகளுக்கு நாங்கள் பின்பற்றும் நெறிமுறைகள் இவை.
1. துல்லியம்
- முக்கிய உண்மைகளை வெளியிடுமுன் குறைந்தது இரண்டு நம்பகமான ஆதாரங்களில் சரிபார்க்கிறோம்.
- நீதிமன்றச் செய்திகளுக்கு, கிடைக்கும்போது மூல உத்தரவை ஆதாரமாகக் கொள்கிறோம்.
- உறுதிப்படுத்தப்படாத தகவலை ‘உறுதிப்படுத்தப்படவில்லை’ என வெளிப்படையாகக் குறிப்பிடுகிறோம்.
2. அசல் எழுத்து
மற்ற ஊடகங்களின் செய்திகளை நகலெடுப்பதில்லை; ஆதாரங்களைப் படித்து, சொந்த நடையில் எழுதுகிறோம். மேற்கோள்கள் உண்மையானவையாக மட்டுமே இருக்கும்.
3. குற்றம் மற்றும் குற்றச்சாட்டுகள்
- குற்றச்சாட்டுகள் குற்றச்சாட்டுகளாகவே குறிப்பிடப்படும்; நீதிமன்றம் நிரூபிக்கும்வரை எவரும் குற்றவாளி எனக் கூறமாட்டோம்.
- பாதிக்கப்பட்டவர்கள், சிறார்களின் அடையாளத்தை வெளியிடமாட்டோம்.
4. அரசியல் நடுநிலை
செய்திகளையும் கருத்துகளையும் தெளிவாகப் பிரித்துக் காட்டுகிறோம். எந்தக் கட்சிக்கும் சார்பாக எழுதுவதில்லை.
5. படங்கள்
அசல் அல்லது பயன்படுத்த அனுமதியுள்ள படங்களையே பயன்படுத்துகிறோம். விளக்கப்படங்கள் தளத்தால் உருவாக்கப்பட்டவை.
6. விளம்பரங்கள்
விளம்பரங்கள் செய்தி உள்ளடக்கத்தைப் பாதிக்காது. ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கம் தெளிவாகக் குறிக்கப்படும்.
7. தானியங்கிக் கருவிகள்
வரைவு, மொழிநடை உதவிக்கு AI கருவிகளைப் பயன்படுத்தலாம்; வெளியிடுமுன் ஆசிரியர் குழு சரிபார்க்கும்.
