நாடாளுமன்றத்திற்குத் தேர்வாகியுள்ள 186 உறுப்பினர்கள் மீது குற்றவழக்குகள்

1400592426-2445

நாடாளுமன்றத்திற்குத் தேர்வாகியுள்ள உறுப்பினர்களில் 186 பேர் மீது குற்றவழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 16 ஆவது மக்களவைக்குத் தேர்வாகியுள்ள 543 உறுப்பினர்களில், மூன்றில் ஒருவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது 34% ஆகும். 14ஆவது மக்களவையில் இந்த எண்ணிக்கை 24% ஆகவும், 15ஆவது மக்களவையில் 30% ஆகவும் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜனநாயக சீர்த்திருத்தத்திற்கான அமைப்பு, மக்களவை உறுப்பினர்களின் வேட்பு மனுக்களை ஆராய்ந்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள பாஜகவில் மட்டும் 98 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 44 பேரில் 8 பேர் மீதும், அதிமுக வைச் சேர்ந்த 37 பேரில் 6 பேர் மீது குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சார்பில் மக்களவைக்குத் தேர்வான 4 உறுப்பினர்கள் மீதும் குற்ற வழக்குகள் இருக்கின்றன.

சதவிகித அடிப்படையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் முதலிடத்திலும், சிவசேனா கட்சி 2ஆவது இடத்திலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திலும் உள்ளதாக” அந்ததகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Related posts