கின்னஸ் சாதனைக்காக காத்திருக்கும் 116 வயது மூதாட்டி

116-year-old Peruvian stakes claim to title of world’s oldest woman

116-year-old Peruvian stakes claim to title of world’s oldest woman

உலகின் மிக வயதான பெண்மணி என்ற புகழ்க் கிரீடம் விரைவில் வந்து சேரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன், ஊடகங்களின் ஒளிமழை தன் மீது பாயப்போகும் அந்த பொன்னான நன்நாளுக்காக பெரு நாட்டை சேர்ந்த 116 வயதாகும் மூதாட்டியான ஃபிலோமெனா ட்டைபே மெண்டோசா ஆவலுடன் காத்திருக்கிறார்.
இந்த பட்டத்தை தற்போது தக்கவைத்துக் கொண்டிருக்கும் கின்னஸ் சாதனையாளரான ஜப்பான் நாட்டின் மிசாவொ வொக்காவா-வை விட வெறும் 3 மாதங்கள் மட்டுமே இளையவரான இவர், 20-12-1897 பிறந்துள்ளார்.
’நான் போன நூற்றாண்டை சேர்ந்தவள் இல்லையப்பா… பேராண்டி, அதுக்கு முந்தைய நூற்றாண்டுக்காரி’ என்று பெருமிதம் பொங்க கூறும் இவர், தனது ஆரோக்கியத்தின் ரகசியமாக இயற்கை உணவுகளை குறிப்பிடுகிறார். உருளைக்கிழங்கு, ஆட்டுக்கறி, செம்மறியாட்டுப் பால் போன்றவை தனக்கு விருப்பமான உணவு என்று குறிப்பிடும் இந்த மூதாட்டி, இது வரை தனது பூர்வீக கிராமமான ஹுவான்காவெலிக்கா-வை விட்டு எந்த சூழ்நிலையிலும் வெளியேறியதே இல்லை என்று தெரிவித்தார்.
மிக இளம்வயதிலேயே விதவையாகி விட்ட ஃபிலோமெனா ட்டைபே மெண்டோசா, தனது 9 குழந்தைகளையும் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்ததாகவும், அவர்களில் 3 பேர் மட்டுமே தற்போது உயிருடன் இருப்பதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
ஏழ்மை நிலையில் உள்ள இவரைப் பற்றி கேள்விப்பட்ட பெரு நாட்டின் அரசு, தற்போது இலவச மருத்துவம் மற்றும் மாதந்தோறும் சுமார் ஐயாயிரம் ரூபாய் உதவிப்பணம் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

116-year-old Peruvian stakes claim to title of world’s oldest woman

116-year-old Peruvian stakes claim to title of world’s oldest woman

A 116-year-old Peruvian living in extreme poverty in the heart of the Andes is in the running to become the oldest person in the world.  Born Dec. 20, 1897, Filomena Taipe Mendoza is only three months younger than Japanese Misao Okawa, who is the world’s oldest person according to Guinness World Records and the US-based Gerontology Research Group.  Peru’s Ministry of Development and Social Inclusion says Taipe Mendoza’s identity card shows the date she was born.“I am not of the past century, young man, but the other one… I am very old,” she told an official accompanying her to cash the first check of a retirement program for seniors living in extreme poverty.  “My secret to longevity is a natural diet: I always ate potatoes, goat meat, sheep milk, goat cheese and beans,” said the wizened Taipe Mendoza, who has never left her dirt-poor village in Huancavelica.  “Everything I cook comes from my garden. I never had canned soft drinks.  “I had a very hard life, I was very a young widow with nine dependent children and I worked hard to raise them. Only three of them are alive,” the ministry quoted her as saying.  “I wish I still had teeth,” she added of her one wish.  The pension means Taipe Mendoza will now get free medical care and receive every month about 250 Soles ($90).

Related posts