பிப்ரவரி 13 உலக வானொலி தினம்

Today is World Radio Day

Today is World Radio Day

நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான். தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடற்கரியது. இந்நிலையில்தான் ஐ.நா.வின் கல்வி , அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது.வானொலி நம்மில் பலருக்கு உற்ற தோழன், வானொலியைக் கேட்டுக்கொண்டே உறக்கத்தைத் தழுவுவோர் இப்போதும் பலருண்டு.அது போல் வானொலியைக் கேட்டுக்கொண்டே கண் விழிப்போரும் பலர். இருபத்தி நான்கு மணி நேரமும் எந்த வினாடியும் அந்த விசையை முடுக்கி விட்டால் போதும் வான் அலைகளில் தவழ்ந்து வரும் இசை நம் செவிகளில் வந்து மோதும். முன்னரே குறிப்பிட்டது மாதிரி இப்போது இணையம், கைத்தொலைபேசி ஆகியவற்றின் மூலமும் கேட்க முடியும் என்றாலும், காற்றலைகளில் தவழ்ந்து வரும் வானொலியின் ஒலிப்பரப்பை உங்களின் செவிகளுக்கு கொண்டு வந்து சேர்க்க உதவும் முக்கியமான கருவி வானொலிதான்.ரேடியஸ் ( radius) என்ற லத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ என மருவியுள்ளது.ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் மைக்கேல் பாரடே இரு விஞ்ஞானிகள் மின்காந்த அலைகளை ஒலி அலைகளாக மாற்றும் கருவியை கண்டறிந்தனர். இவர்களை பின்பற்றி ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்பவர் மின்காந்த அலைகளை ,டிரான்ஸ்மீட்டராக மாற்றினார். பின்னர் இயற்பிலுக்கான நோபல் பரிசு (1909) பெற்ற இத்தாலியைச் சேர்ந்த கூலில்மோ மார்கொனி (1874-1937) வானொலியை கண்டறிந்தார்.

இன்று உலக முழுவதும் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்ட செய்தியை 1947-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய பிரிட்டன் பிரதமராக இருந்த சர். க்ளமன்ட் அட்லி,(1945-1951) வானொலி வாயிலாக அறிவித்ததை நம் இந்தியர்கள் கேட்டறிந்ததாக சொல்கிறார்கள். முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள் போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி. அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் ரேடியோ என்றால் அது மிகையாகாது.

Today is World Radio Day

World Radio Day is observed on February 13, 2014. It was proclaimed on 3 November 2011 by UNESCO’s 36th General Conference. It was originally proposed by Spain. The General Conference proclaimed that this day be celebrated by UNESCO on 13 February, the anniversary of the day the United Nations established United Nations Radio in 1946.   In December 2012, The General Assembly of the UN endorsed the proclamation of World Radio Day, thereby becoming a Day to be celebrated by all UN agencies, funds and programmes and their partners. All regional and international broadcasting organizations supported the proclamation. Various radio industry bodies around the world are supporting the initiative by encouraging stations in developed countries to assist those in the developing world.  Radio broadcasting is a one-way wireless transmission over radio waves intended to reach a wide audience. Stations can be linked in radio networks to broadcast a common radio format, either in broadcast syndication or simulcast or both. Audio broadcasting also can be done via cable radio, local wire television networks, satellite radio, and internet radio via streaming media on the Internet.

Related posts