அமெரிக்க சில்லறை வணிக நிறுவனத்தில் சிகரெட், புகையிலை விற்பதில்லை என முடிவெடுத்து உள்ளனர்

CVS Vows to Quit Selling Tobacco Products

CVS Vows to Quit Selling Tobacco Products

அமெரிக்காவின் பார்மஸி சில்லரை வணிக நிறுவனமான சிவிஎஸ் கேர்மார்க், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதில்லை என முடிவு செய்துள்ளது. அக்டோபர் 1 ம் தேதி முதல், சிவிஎஸ் பார்மஸியின் 7600 கடைகளிலும் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. 800 கடைகளில் மினி க்ளினிக்களும் செயல்பட்டு வருகின்றன. புகையிலை மற்றும் சிகரெட் பொருட்களை விற்பதை தடை செய்வதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் உடல் நலத்தில் நாங்கள் முழுமையாக அக்கறை செலுத்தமுடியும். நோய்க்கு காரணமாக இருக்கும் சிகரெட், புகையிலையை ஒரு கையிலும், அதை குணமாக்குவதற்காக மருந்து மாத்திரைகளை இன்னொரு கையிலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் கொடுப்பது, முரண்பாடான செயலாக இருக்கிறது. அதனால், இந்த முடிவு எடுத்தோம். ஆண்டுக்கும் 2 பில்லியன் டாலர்கள் வருமானம் குறையும் என்றாலும் நீண்டகால மக்கள் நலன் கருதி இதை அமல்படுத்து உள்ளோம் என பிரசிடெண்ட் மற்றும் சி.இ.ஓ லேரி மெர்லோ கூறியுள்ளார். சிகரெட் பழக்கம் உள்ளவர்களை நல்வழிப் படுத்தவும் சிவிஎஸ் நிறுவனம் முயற்சிகள் எடுக்கிறது. பார்மஸிகளிலும் மினி க்ளினிக்களிலும் இதற்கான மருத்தவ உதவி கிடைக்க உள்ளது. சிவிஎஸ் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு உலகளாவிய பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பொது சுகாதார ஆர்வலர்கள், புகையிலை ஆராய்ச்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இதனை ஒரு முன்மாதிரி நடவடிக்கை என பாராட்டியுள்ளனர். ஒரு காலத்தில் செயின் ஸ்மோக்கராக இருந்து இப்போது அதிலிருந்து மீண்டுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, “சிவிஎஸ்ஸின் இந்த அறிவிப்பு மிகுந்த வலிமையான ஒன்று. புகைப்பழக்கத்தால் வரும் நோய்களைத் தடுக்க இது ஒரு முன்னோடி முயற்சி. எனது வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார். 2011-லேயே புகைப்பதை விட்டுவிட்டாராம் ஒபாமா! 

CVS Vows to Quit Selling Tobacco Products

CVS Caremark, the country’s largest drugstore chain in overall sales, announced on Wednesday that it planned to stop selling cigarettes and other tobacco products by October.

Related posts