எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திர பட்டறை தொழிலாளர்கள் ஸ்டிரைக்.

Stainless steel and brass vessels Workshop Workers on Strike

Stainless steel and brass vessels Workshop Workers on Strike

5வது நாளாக திருப்பூரில் எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திர பட்டறை  தொழிலாளர்கள் ஸ்டிரைக். திருப்பூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் சுமார் இரண்டு ஆயிரம் தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர் . ஊதிய உயர்வு தொடர்பான  பேச்சு வார்த்தையில் தோல்வி அடைந்ததால் தொழிலாளர்கள் போராட்டம் 5வது நாளாக நீடிக்கிறது . வேலை நிறுத்தம் காரணமாக  பாத்திர உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 27ம் தேதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, 28ம் தேதியிலிருந்து தொழிற்சங்கங்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தன. இதைதொடர்ந்து கடந்த 4 நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து, திருப்பூர் பி.என்.ரோட்டில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் இருதரப்பினரிடையே நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. நேற்று முன்தினம், மீண்டும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பினரையும் தனித்தனியாக அழைத்து தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பேசினார். அப்போது, பாத்திர பட்டறைதாரர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றால் மட்டுமே இனிமேல் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேசியபோது, பாத்திர கூலி உயர்வு சதவீதம் தெரியாமல் பரிசீலனை செய்ய முடியாது. அதனால் போராட்டத்தை வாபஸ் பெற முடியாது என்று அவர்களும் உறுதியாக கூறி விட்டனர்.

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதையடுத்து வரும் 1ம் தேதி (இன்று) மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தொடர்ந்து 4 நாளாக நடந்து வரும் பாத்திர தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், ரூ.2 கோடி மதிப்பிலான உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Stainless steel and brass vessels Workshop Workers on Strike

Advertisement:

CMDA approved Plots sale at Tambaram : Visit : http://www.bestsquarefeet.com/

Related posts