பாட்னாவில் கலப்பு திருமணம் செய்த மகன் மீது தந்தை போட்ட அவதூறு வழக்கு

Man files suit against son for inter-caste marriage

Man files suit against son for inter-caste marriage

பீகார் மாநிலம் பாட்னாவில் தன்னை மீறி வேறு சாதிப் பெண்ணை மணந்த மகன் மீது அவதூறு வழக்குப் போட்டுள்ளார் ஒரு தந்தை. இந்த வழக்கைப் போட்டுள்ளவரின் பெயர் சித்தநாத் சர்மா. இவர் ஒரு வழக்கறிஞர். இவர் தனது மகன் சுஷாந்த் ஜாசு மீது வழக்குப் போட்டுள்ளார். அதில், எனது மகன் கலப்பு திருமணம் செய்துள்ளான். எனவே அவனை நான் ஒதுக்கி வைத்து விட்டேன். இனிமேல் எனது பெயரை அவன் எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது. மீறி எனது பெயரை பயன்படுத்தினால், பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் ரூ. 10,000 எனக்கு காப்புரிமையாக தர வேண்டும். மேலும் எனது பெயரையும், கெளரவத்தையும் பாழ்படுத்தி விட்டான் எனது மகன். எங்களது விருப்பத்தை மீறி அவன் வேறு சாதிப் பெண்ணை மணந்துள்ளான். எனவே அதற்கு இழப்பீடாக ரூ. 1 கோடி தர வேண்டும் என்று கூறியுள்ளார். தானாப்பூர் கோர்ட்டில் இந்த வழக்குப் போடப்பட்டுள்ளது. சுஷாந்த் ஜாசு, மத்திய அஏரசில் சீனியர் வரி உதவியாளராக குஜராத் மாநிலம் பாலம்பூர் நகரில் பணியாற்றி வருகிறார். இவர் தானாப்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி திருமணம் செய்தார். இது இரு சாதித் திருமணமாகும். பெண், பாட்னாவில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். வழக்கு குறித்து சர்மா கூறுகையில், நானும், எனது மனைவியும் இத்தனை காலமாக எங்களது மகனுக்காக நேரத்தை செலவிட்டுள்ளோம், பணத்தை செலவிட்டுள்ளோம். ஆனால் அவன் துரோகம் செய்து விட்டான். இத்தனை காலமாக வளர்த்து வந்த எங்களை விட்டு விட்டு 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த பெண்ணிடம் காதல் வயப்பட்டு எங்களைத் தூக்கி எறிந்து விட்டான். எனது மகனின் செயல், 400 ஆண்டு கால குடும்பத் திருமணப் பாரம்பரியத்தை கேலிக்கூத்தாக்கி விட்டது என்றார்.

Man files suit against son for inter-caste marriage

A man disowned his son and filed a defamation case against him on Saturday for marrying out of caste.   Sidhnath Sharma, a Patna lawyer, also asserted that his son Sushant Jasu could no longer use his name and will have to pay Rs 10,000 copyright fees every time he used it. Filing a defamation suit of Rs 1 crore against his son in the court at Danapur here, Sharma said: “My image and honour was hurt by my son, who solemnized an inter-caste marriage against our wishes, now he must compensate for it…”   Sushant Jasu, who works for the central government as a senior tax assistant in Gujarat’s Palampur town, married a girl, a resident of Danapur, Patna who works in a private bank on November 19, 2013.   An angry Sharma said: “… I and my wife spent time and money to nurse my son for years but he betrayed us. He fell in love with a girl who came into his life two years ago only.”   He claimed his son’s act has ended a nearly 400-year-old family tradition of marrying within their own caste.   In Bihar, inter-caste marriages, though encouraged by the government, are still largely considered taboo and those who do it generally face hostility from their families and society.   In a bid to encourage such marriages, the state government last year decided to double the incentive for it.   Under the scheme, a woman marrying out of caste will now get Rs 50,000 instead of Rs 25,000.

Man files suit against son for inter-caste marriage

Related posts